ராஜா ஆளும் ‘டோரதி’

இசைஞானி இளையராஜாவின் இசையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகி  இம்மாத இறுதியில் திரைக்கு வர இருக்கும் படம் டோரதி. 

இந்தப் படம் எங்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்கிறார்கள்  ரிஷிகாந்த்தும் சனத்தும் 
 
”அண்மையில் நான் நடித்து வந்த மொத ராத்திரி படம் ஆரம்பிப்பதற்கு   முன்பே இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது” என்றார்  ரிஷிகாந்த் 
 
”கார்த்திக் சுப்புராஜ் சார் முன்பே எனக்கு அவர்  படங்களில் நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளார் ஆனால் டோரதி எனக்கு ரொம்ப  ஸ்பெஷல் “என்றார் சனத் 
 
இது 1990களில் மதுரையில் நடக்கும் கதை என்கிறார் கார்த்திக் சுப்புராஜ் . 
 
“இந்தக் கதை எழுதி பல வருடங்கள் ஆகிறது. கதைப்படி ஒரு பிரபலமான ஹீரோயின் . இரண்டு இளம் நாயகர்கள்தான் செட் ஆகும். அப்படி பெரிய ஹீரோ இல்லாத புராஜக்ட் என்பதால் அவ்வளவு சீக்கிரம் தயாரிப்பாளர் அமையவில்லை. 
 
சனத்திடம் ”நீ ஒரு ஹீரோ ரெடியாகி விடு” என்று சொல்வேன். அவரும் ரெடியாகி வந்து நிற்பார். ஆனால் நான் வேறு படத்துக்குப் போய் விடுவேன். இப்படியே பல முறை அவர் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் தளராமல் ஒவ்வொரு முறையும்  வந்து நிற்பார். 
 
உலகப்பட விழா ஒன்றில் இந்தக் கதையை சொன்னபோது பிடித்துப் போய் சிக்ஷா  என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. 
 
 ரிஷிகாந்த் எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை . ஆனால் அவரது குறும்படங்களை பார்த்து இருக்கிறேன். இன்னொரு ஹீரோவாக ரிஷிகாந்த் முடிவானார். 
 
ஒரு மலையாளப்  பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 
 
இது எனக்கு ரொம்ப பர்சனலான படம் ( ஹீரோக்களுக்கு கார்த்திக், சுப்பு என்று பெயர் வைத்திருக்கும்போதே தெரிகிறது) 
 
படம் ரிலீசுக்கு முன்பே டொராண்டோ இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட இருக்கிறது. 
 
இசைஞானி இளையராஜா இசையில் வந்த கல்யாண விருந்து பட்டையைக் கிளப்புவதும் , முத்துமணி பாடல் உருக வைப்பதும் எல்லோருக்கும் தெரியும். இன்னும் அற்புதமானா பாடல்கள் வர இருக்கின்றன. 
 
அவருடன் பணியாற்றியது எனது லைஃப் டைம் அனுபவம் . அவரிடம் பணியாற்றும்போது நான் எடுத்த காட்சியை வேறு கோணத்தில் அவர் எனக்குப் புரியவைத்தார்.  இப்படிப் பார்த்துப் பழகு என்றார் . அவர் சொன்ன கோணத்தில் யோசித்தபோது எனக்கே எனது படம் புதுசாக இருந்தது
 
அடுத்த படத்திலும் அவருடன்தான்  பணியாற்ற இருக்கிறேன்..
 
அது இல்லாமல் இந்தப் படத்துக்காக இளையராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசையின் முக்கிய பகுதிகளை தொகுத்து ஓர் இசை ஆல்பம் போல பட வெளியீட்டுக்கு முன்னதாக  வெளியிட இருக்கிறோம் ” என்றார். 
 
ராஜா ஆளட்டும் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *