ஏ ஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான், ரியா ஹரி ஆகியோர் தயாரிக்க , நவீன் சந்திரா, ரியா ஹரி, ஆடுகளம் நரேன், ரித்விகா, திலீபன் நடிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கி இருக்கும் படம் .
அடுத்தடுத்து சில கொல்லப்படுகிறார்கள். வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறார் ஒரு காவல் அதிகாரி ( நவீன் சந்திரா)
இறந்த எல்லோரும் பாயின்ட் பிளாங்க் கில் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டு இருக்கிறார்கள் .
விசாரணையில் ஒரு நிலையில் மனிதப் பிறப்பின் மேஜிக்கான விஷயம் ஒன்றும் , பள்ளி ஒன்றில் நடந்த பயங்கர நிகழ்வு ஒன்றும் அதன் வித்தியாசமான பழிவாங்கல் ஒன்றும் சம்மந்தப்பட்டு இருப்பது தெரியவர, படம் தொடர, கடைசியில் மாத்தி யோசி பாணியில் வித்தியாசமான கிளைமாக்ஸ் உடன் முடிகிறது படம் .
படத்தின் மிக முக்கிய விசயமே அந்த மேஜிக்கல் விசயமும் அதை வைத்து சொல்லப்படும் நிகழ்வும்தான் . அருமை
மிக இயல்பாக நடித்துள்ளார் நவீன் சந்திரா
ஒற்றைச சரடாக நகரும் திரைக்கதை அடுத்தடுத்து சில திருப்பங்களை கொடுத்துக் கொண்டே போகிறது
லோகேஷ் அஜில்சின் மேக்கிங் நன்றாக இருக்கிறது . கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.
படத்தின் அடிப்படைக் கதை அபாரமானது . ஆனால் திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் .
காட்சிகளை துவங்கி முடிக்கும் விதம் உரையாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்
பெரும் லாஜிக் ஓட்டைகள் இருப்பது அயற்சி.
இடது கை சுண்டு விரலின் வெட்டிப் போட்ட நகத்தால் இசை அமைத்துள்ளார் டி. இமான்,
கிளைமாக்சை நெருங்க நெருங்க ஷார்ப்பாக சொல்ல வேண்டும் என்பது சரிதான் . ஆனால் வெகுஜன ரசிகனுக்கு புரியும்படியும் இருக்க வேண்டுமே . அந்த தெளிவும் முக்கியம் அல்லவா?
அட்டகாசமான கிளைமாக்ஸ் .. ஆனால் அதற்கு பொருத்தமான முன் காட்சிகள் இல்லை.
பள்ளிப் பிள்ளைகள் செய்யும் தவறுகளை பசங்கன்னா அப்படித்தானே என்ற தொனியில் காட்ட வேண்டும். இதில் ஏதோ வன்ம குடோன்கள் போல காட்டி இருக்கிறார்கள்.
இந்த கதையை வைத்து நல்ல திரைக்கதை அமைத்து சும்மா தெறிக்க விட்டிருக்க முடியும்