எதிர்பார்ப்பை விதைக்கும் ‘எவனவன்’ பட இசை வெளியீடு !

evan 7

புகழ் பெற்ற எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மோகமுள் நாவலை திரைப்படமாக இயக்கி வெற்றி கண்டவர் ஞான ராஜசேகரன்.

அதன் பின்னர் அவர் இயக்கிய பாரதி, பெரியார் , ராமனுஜன் போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்  தமிழ் சினிமாவில் புதிய  பாதையை திறந்து விட்டன .

அடிப்படையில் ஐ ஏ எஸ் அதிகாரியான ஞான ராஜசேகரனுக்குள் இருக்கும் இயக்குனரை இனம் கண்டு அவரை இயக்குனராக அறிமுகப் படுத்த வேண்டும் என்றால்,

ஒரு படத் தயாரிப்பாளருக்கு எவ்வளவு ஆழமான அறிவு இருக்க வேண்டும்! 

அந்த அறிவுக்கு சொந்தக்காரர்தான் மோகமுள் படத்தை தயாரித்த  ஜானகிராமன் (ஆம். மோகமுள் படத்தை தயாரித்தவர் பெயரும் ஜானகிராமன்தான்)

evan 8

தமிழ் திரைபடத் தயாரிப்பாளர் சங்கத்திலும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் பல அதிரடியான அதிர்வுகளை உருவாக்கியவர் இந்த மோகமுள் தயாரிப்பாளர்  ஜானகிராமன்

இவரது மகன்  நட்டிகுமார் அமெரிக்காவில் சினிமா பற்றி படித்து பட்டம் பெற்றவர், அத்துடன்  சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருது பெற்ற “ மெய்ப் பொருள் “ என்ற படத்தையும், பனித்துளி என்ற படத்தையும் இயக்கியவர்.

இந்த நட்டிகுமார் இப்போது மூன்றாவதாக இயக்கி இருக்கும் படம் ‘எவனவன்’ .

 டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ்  பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்க,

வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்க, அகில் சந்தோஷ் என்ற புதுமுகத்துடன், முருகாற்றுப்படை படத்தில் நடித்த சரண் மற்றும் சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்க,

evan 9

கதை, திரைக்கதை,வசனம் எழுதி எவனவன் படததை இயக்கி இருக்கிறார் நட்டிகுமார்

படத்துக்கு ஒளிப்பதிவு – அருண் பிரசாத் , இசை  பெடோ பீட் ,  நடனம்  –  விமல் ,  பாடல்கள்  –  தென்றல் ராம்குமார் ,  எடிட்டிங் –  ராமாராவ்,  ஸ்டன்ட்   – குன்றத்தூர் பாபு.

கலை இயக்கம்  –  கே.வி.லோகு ,  தயாரிப்பு மேற்பார்வை  – சாந்தகுமார், தயாரிப்பு  –  தங்கமுத்து, பி.கே.சுந்தர்,கருணா, நட்ராஜ்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் , இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன், கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன்,  அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, பி.எல் தேனப்பன், பாபு கணேஷ்,

இயக்குனர்கள் ஞான ராஜசேகரன், பிரவீன் காந்த் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு  இசை மற்றும்  முன்னோட்டத்தை வெளியிட்டனர் .

evan 2

திரையிடப்பட்ட முன்னோட்டம் படத்தின்  வணிக ரீதியிலான உள்ளீட்டை விளக்கும்படி இருந்தது . பாடலில்  கவிதைப் பூர்வமான கவர்ச்சி தளதளத்துத் தளும்பித் ததும்பியது .

பாடலைப் படமாக்கிய விதத்தில் ‘நாட்டி’ குமாராக இருக்கிறார் நட்டி குமார்

நிகழ்ச்சியில் பேசிய எஸ் ஏ சந்திரசேகரன் “இப்போது இளைஞர்கள் வித்தியாசமான் சிந்தனையுடன் வருகிறார்கள் . துருவங்கள் பதினாறு போன்ற வித்தியாசமான படங்கள் வருகின்றன .

இங்கே தரம்தான் முக்கியம் . இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் .

”நட்டிகுமார் மிகச் சிறந்த திரைக்கதை மற்றும் டைரக்ஷன் திறமை பெற்றவர் .

evan 6

அவர் கண்டிப்பாக பெரிய வெற்றிகள் பெறுவார் ” என்றார் ஞான ராஜசேகரன்

கலைப்புலி எஸ் தாணு “எவனவன் என்ற பெயரே எங்கே எவன் , எப்போது அவன் , யாரோடு அவன் என்பது போன்ற கேள்விகளை உருவாக்கும்படி கவர்ச்சிகரமாக இருக்கிறது .

நட்டி குமார் மிகச் சிறந்த திறமைசாலி . இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்’ என்றார் .

evan 3

சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது ” நட்டிகுமார் எனக்கு மிகவும் வேண்டிய பிள்ளை . அவரது தந்தை ஜானகிராமன் எனக்கு நெருக்கமானவர் .

நட்டிகுமார் சிறந்த திறமைசாலி . இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்றார்

டி.சிவா தனது பேச்சில் “என் . டி. ஜானகிராமன் மிகச் சிறந்த மனிதர் . எங்களோடு பழகியவர் . பல விசயங்களில் தீவிர விவாதங்களை முன் வைத்துப் பேசுவார் .

நட்டி குமார் மிகச் சிறந்த படைப்பாளி . அவரது பனித்துளி உண்மையிலேயே மிகச் சிறந்த படம். எனக்கு மிகவும் பிடித்த படம். ஏனோ அப்போது ஓடாமல் போய் விட்டது . இப்போதும் நீங்கள் அந்தப் படத்தை பார்த்தல் ரசிப்பீர்கள் .

evan 4

இந்த படத்தின் முன்னோட்டம் சிறப்பாகவும் பாடல் அழகாகவும் வந்துள்ளது . படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.” என்றார் .

பாபு கணேஷ் பேசும்போது ” டாக்டர் ராஜ சேகர் இதுதான்டா போலீஸ் படத்தை எடுத்தபோது , அதற்கு பல பெயர்களை பரிசீலித்தார் . அதில் ஒரு பெயர் எவனவன் என்பதும் !

பிறகு அவர் எவனா இருந்தா  எனக்கென்ன என்ற பெயரிலும் ஒரு படம் எடுத்தார் .

இப்போது எவனவன் என்ற பெயரில் நட்டிகுமார் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் . நட்டிகுமார் மிகச் சிறந்த திறமைசாலி. இந்தப் படத்தின் திரைக்கதையை அட்டகாசமாக அமைத்து இயக்கி உள்ளார்

சத்யஜோதி தியாகராஜனிடம்  கதைகள் சொல்லியும் இருக்கிறார் . அவர் இன்னும் பெரிய படங்களை இயக்குவார் ” என்றார்

evan 5

நிறைவுரை  ஆற்றிய இயக்குனர் நட்டி குமார் ” திட்டமிட்டு செயல்படுவதிலும்,செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள்.

இதை செய்தால் இப்படி செய்தால் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்தே செய்பவர்கள் பலர். 

பின் விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் சிலர் உண்டு. அந்த வகையில் ‘சின்ன தவறுதானே செய்கிறோம்.அதனால் என்ன பெரிதாக வந்து விடப் போகிறது’ என்று நினைத்து ,

இளைஞன் ஒருவன் செய்த தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில் ஆழ்த்துகிறது என்பதுதான் கதைக் களம்.

இதில் வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாத குற்றம் ஒன்றை விறுவிறுப்பாகக் கண்டு பிடிக்கும் அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.

evan 1

மெய்ப்பொருள் படத்தின் படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுத்தேன் . பனித்துளி படத்தை முக்கால்வாசி அமெரிக்காவில் எடுத்தேன் . அதில் ஹாலிவுட் பாணியில் பல ஷாட்களை எடுத்தேன் .

பனிச் சறுக்கில் கேமராவோடு சறுக்கியபடியே பயணித்துக் கூட படம் பிடித்தோம் . அதை எல்லாம் யாரும் அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு

ஆனால் எவனவன் படத்தின் படப்பிடிப்பு தொண்ணூறு சதவீதம் சென்னை சென்னையில் நடந்தது . ஆந்திராவில் கொஞ்சம் நடந்தது.  பாடல் காட்சிகள் மலேசியாவில் படமானது.

நமது ரசிகர்களின் மன நிலை மற்றும் ரசனை உணர்ந்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன். இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன் ” என்றார் இயக்குனர் நட்டிகுமார்.

வாழ்த்துகள் நட்டி குமார் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *