‘கார்டியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரிக்க, ஹன்சிகா மோத்வானி,  சுரேஷ் மேனன்,ஸ்ரீமன், அபிஷேக்  வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, மொட்டை ராஜேந்திரன்,பிரதீப் ராயன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை  நடிப்பில் குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ள படம்  ‘கார்டியன்.’ கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணனே எழுதியுள்ளார்.  
 
முதல் டீசர் முன்பே வெளியான நிலையில் , படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்   தயாரிப்பாளர்  விஜயசந்தர். பேசியபோது, “நான் தொடங்கிய ‘வாலு’ திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகே வெளியானது. 
 
அந்த படம் வெளியாவதற்கு என் நலம் விரும்பிகளான ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கொடுத்த ஊக்கமே காரணம். ‘கார்டியன்’ படம் தொடங்குவதற்கு முன் நான் ஒரு படத்தை இயக்கலாம் என்று இருந்தேன்,  கொரோனா தொற்று காலம் என்பதால்  பல திரைப்படங்களின் வெளியிட்டு தேதியும் மாறி விட்டது. அடுத்ததாக படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தன் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் தான் இந்த படம் தயாரிப்பு குறித்த யோசனையை எனக்கு அளித்தனர்.
 
இயக்குனர்கள் இருவரும் இந்த கதையை என்னிடம் கூறினர். கதாநாயகி முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் தனது எண்ணத்திற்கு முதலாவதாக வந்தவர் ஹன்சிகா மோத்வானி.   அதுவே இந்த படம் சிறப்பான ஒரு தயாரிப்பாக உருவாவதற்கு மூல காரணமாக அமைந்தது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் உழைத்தோம். சிறப்பாக இந்த படம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.” என்று  கூறினார்.
 
 லால்குடி என் இளையராஜா பேசும் பொழுது,”நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக குருநாதருக்கும் அவரது மாணவர்களுக்கும் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரு கே.எஸ் ரவிக்குமார் அவர்களிடம் பணிபுரியும் பொழுது நிறைய கற்றுக் கொண்டேன். அதுபோல சபரி மற்றும் குரு சரவணன் இருவருடனும் பணிபுரிந்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய்சந்தர் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்,அப்படித்தான் நான் இந்த படத்தில் விருப்பப்பட்டு பணியாற்ற வந்தேன். படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளோம். “, என்று கூறினார்.
 
ஒளிப்பதிவாளர் தியாகராஜன்,” விஜயசந்தர் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரை சந்தித்த பிறகு இந்த படத்தை பற்றி கூறி, எனக்கு வாழ்த்து தெரிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் இணைகிறோம் என்று கூறினார்.  படத்தின் கதாநாயகி இங்கு அமைதியாக இருந்தாலும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ” என்றார்.
 
டான் அசோக் பேசும்போது, ” விஜய் சந்தரின்  முதல் படமான ‘வாலு’ படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். தற்போது அவர் தயாரிக்கும் முதல் படத்தில் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. “, என்றார்.
இசையமைப்பாளர் சாம்.C.S பேசும் பொழுது,”சமீப காலத்தில் ஹன்சிகா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது.முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்ஷிகாவும் ஒருவர்.மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார்.
 
 நிறைய ஹாரர் படங்கள் பண்ணும் பொழுது நாம் நிழல் உலகத்திற்கு சென்று விடுவது போல தோன்றும் அது சினிமா என்ற ஆர்வமும் காரணமாகும். அதேபோலத்தான் இந்த படத்திலும் சிரத்தையுடன் பணியாற்றி உள்ளேன். இந்தத் திரைப்படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும்  உருவாகியுள்ளது. 
 
தயாரிப்பாளர் விஜய்சந்தர்  கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் மெனக்கட்டுள்ளார். ஒரு படைப்பு மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற தேடலுடன் திரைப்படத்தை விஜய்சந்தர் உருவாக்கியுள்ளார். திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணி புரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்பப்பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளி வருகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு படத்திற்கான இசையமைப்பு பணியில் பலதுறையினர் பணியாற்றுகின்றனர்.அதை தொகுத்து பணியாற்றும் பொழுது படத்தின் இசை நடிகர்களின் இயல்பான நடிப்பை அழுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக பணியாற்றுகிறேன். 
 
ஒரே மாதிரியான இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்களுக்கு தோன்றும் விதமாக இல்லாமல், விதவிதமான திரைக்கதைகளையும் விதவிதமான இசையையும் முயற்சி செய்து கொண்டும் பணியாற்றிக் கொண்டும் இருக்கிறேன். அவ்வாறு செய்யும்போது சில வெற்றி அடையும் சில தோல்வியடையும் தோல்வியிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளேன். ” என்றார்.
 
ஹன்சிகா மோத்வானி பேசும் பொழுது,” எப்பொழுதும் போல ஊடகத் துறையினரின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் ஆதரவும் தேவை.  ” என்றார்
 
படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை பெற்றுள்ள யுவராஜ்  பேசும்பொழுது,”இது ஒரு புதுவிதமான ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதிர்ஷ்டம் இல்லாத ஒருவருக்கு கிடைக்கும் பொருள் மூலம் எவ்வாறு அவரது வாழ்க்கை மாறுகிறது என்பதைப் பற்றிய கதைதான் இது”, என்றார்
 
படத்தின் கதாநாயகன் பிரதீப் பேசும் பொழுது,”எங்களை வாழ்த்த வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. ஏதாவது ஒரு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன் என்று கூறினார். அதே போல இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கினார். !”, என்றார்.
 
பாடகர் மற்றும் நடிகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பேசும்பொழுது,”இந்த படம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு பாடகர்தான். நடிகர் என்பது எனக்கு சற்று தூரமான விஷயம். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்சந்தர் உடன் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன். திடீரென அவர் இப்படி ஒரு கதாபாத்திரம் உள்ளது நடிக்கிறீர்களா, என்று கேட்டார் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. என்னுடன் நடித்த சுரேஷ் மேனன் மற்றும் ஸ்ரீமன் அவர்களும் நீண்ட நாள் நண்பர்கள் அவர்களுடன் நடித்தது சிறப்பான அனுபவமாக அமைந்தது. திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் என்னை பாராட்டி பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குனர் குரு சரவணன் படத்தின் டப்பிங் பணியின் போது தனக்கு என்ன தேவையோ அதை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஓடிடியில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் திரையரங்கில் வந்து கண்டுகளிக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி”, என்றார்
 
 நடிகை  தியா பேசும் போது,”வாய்ப்புகள் தரப்படுவதில்லை உருவாக்கப்படுகிறது என்று கூறுவார்கள்.ஆனால் வெள்ளித் திரையில் இயக்குனர் விஜயச்சந்தர் எனக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய பரிசு நமக்கு நம் மீதுள்ள நம்பிக்கையை விட நம் மீது பிறர் வைக்கும் நம்பிக்கையே ஆகும் என என் சகோதரி கூறுவார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் என் மீது வைத்தநம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எதிர்காலங்களில் பணியாற்றுவேன்”,என்றார்
 
நடிகர் அபிஷேக் வினோத் பேசும் பொழுது,”தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.விஜய்சந்தர் என்னுடைய குரு ஆவார். ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்தில் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தார்.அதேபோல இப்படத்திலும் நடிக்க கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார்.அகதாநாயகி ஹன்சிகா மோத்வானி மற்றும் கதாநாயகன் பிரதீப் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் “,என்று பேசினார்.
 
நடிகர் தங்கதுரை பேசும் பொழுது,”திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது.இந்த படத்தில் அவருடைய உதவியாளர்களிடம் பணி புரிந்துள்ளேன். ‘வாலு’ திரைப்படத்தில் விஜயசந்தர் அவர்கள் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்தார். ஹன்சிகா  மிகவும் அழகான பேயாக இந்த படத்தில் நடித்துள்ளார்.” என்றார்
 
இரட்டை இயக்குனர்களில் ஒருவரான குரு சரவணன்  பேசும்பொழுது,”தமிழுக்கும்,கடவுளுக்கும், எங்களது குருநாதர் திரு.கே. எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கடவுள் கொடுத்த வரம் என்னவென்றால் திரு.கே. எஸ்.ரவிக்குமார் எங்களை அவரிடம் சேர்த்துக் கொண்டதுதான்.தயாரிப்பாளர் விஜயசந்தர் எங்களுக்கு நீண்ட நாள் நண்பர் தான். கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே, தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருப்பதையும் இணைந்து பணிபுரியலாம் என்றும் கூறினார்.நானும் சபரியும் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறந்த நண்பர்கள் இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். 
 
கதையை தயாரிப்பாளர்,அவரது குழுவினர் மற்றும் ஹன்ஷிகாவிடமும்  கூறி ஒப்புதல் பெற்றோம்.பின்னர் எங்கள் குருநாதரிடம் இதைக் கூறி,ஆசி பெற்றோம்..ஹாரர் திரைப்படத்தை சிறந்த திரைக்கதையுடன் உணர்வுப் பூர்வமான கதைக்களத்துடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக உருவாக்கி உள்ளோம்.”என்றார்
 
இரட்டை இயக்குனர்களில் இன்னொருவரான சபரி பேசும் பொழுது,”நான் இந்த மேடையில் இருப்பதற்கு எங்களுடைய குருநாதர் ஆகிய திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே முக்கிய காரணம்,அவர்களை நாங்கள் காட்ஃபாதராகவே நினைக்கிறோம். அவர்தான் எங்களுக்கு முதல் பட வாய்ப்பு அளித்து எங்களை இயக்குனராக உருவாக்கினார் இனிமே எத்தனை படம் இயக்கினாலும் அவர் அளித்த  முதல் வாய்ப்பை என்றும் மறக்க மாட்டோம். அதேபோல தயாரிப்பாளர் விஜய்சந்தர் ஒரு இயக்குனராக இருப்பதால் எங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாக இருந்தார்.
 
 கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, நான் உதவி இயக்குனராக இருக்கும் போதிலிருந்து நல்ல பழக்கம் அந்த நினைவுகளை நாங்கள் இப்பொழுது பகிர்ந்து கொண்டோம்.” என்றார் 
 
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்பொழுது,” நான் எப்பொழுதும் இயக்குனர்களை பற்றிதான் முதலாவதாக பேசுவேன்.ஆனால் இங்கே தயாரிப்பாளர் பற்றி பேசுகிறேன். ஆனால் தயாரிப்பாளரே ஒரு இயக்குனர் தான் அவரைப்பற்றி முதலில் பேசுகிறேன். இந்த இரட்டை இயக்குனர்களின் முதலாவது படமான கூகுள் குட்டப்பா வெளியாகும் முன்பே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் விஜய்சந்தருக்கு மிக்க நன்றிகள். கலைஞர்-100 நிகழ்விற்கு  நாங்கள் உருவாக்கிய நாடகத்திற்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல் இசையமைத்து கொடுத்தார் சாம்.C.S. .அவருக்கு நல்ல குரல்வளம் அவருக்கு உள்ளது. அவருக்கு இசைவெறி உள்ளது. 
 
கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் வியக்கும் அளவிற்கு வீடு ஒன்றின் கலை வடிவத்தை அமைத்திருந்தார். என்னுடனும் என்னுடைய உதவியாளர்களுடன் பணி புரிந்தமைக்கு மிக்க நன்றி. ஹன்ஷிகாவும் தன்னுடைய சிறப்பாக நடித்திருந்தார்.அதேபோல பிற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.கார்டியன் என்ற தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக உள்ளது. எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன. குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள், சபரி சற்று சாதுவான ஆள் இசையமைப்பாளர் கூறியது போல இருவரையும் கணிக்க முடியாது.எங்கிருந்தாலும் நல்லபடியாக வருவதற்கு வாழ்த்துகிறேன்”, என முடித்தார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *