எப்படி இருக்கு லிங்கா டீசர் ?

linga-motion-pictureஏழுமலையான் படத்துடன் கூடிய ராக்லைன் நிறுவன பெயருடன் ஆரம்பிக்கிறது லிங்கா டீசர்.

மாவட்ட கலெக்டரான ராஜ லிங்கேஸ்வரன் (ரஜினி) கட்டிய அணையின் கல்வெட்டையும் அணையும் பார்க்கிறார் இன்னொரு ரஜினி.

 நீண்ட பாதையில் வரும் மாட்டு வண்டிகள்,   மின் விளக்கில் ஜொலிக்கும் ஒரு பங்களா காட்டப்பட , அடுத்து ஏ.ஆர்.ரகுமான் பெயர்.  அதைத் தொடர்ந்து ரெயில் சண்டைக் காட்சியும் பாலத்தை தகர்க்க சிலர் கயிறு கட்டி பாலத்தில் இறங்கும் காட்சியும் இடம்பெறுகிறது.

அதன் பிறகு தயாரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷ் பெயரும், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜனி பெயரும் இடம் பெறுகிறது.

பிரம்மாண்ட செட்டுகளில் ரஜினி அனுஷ்கா மற்றும், சோனாக்ஷியுடன் ஆடுவது சிவாஜி படத்தின் செட்டுகளை நினைவுபடுத்துகிறது.

மனிதன் படத்தில் தோல் சட்டை பேண்ட் அணிந்து வருவார் ரஜினி.அதுபோன்ற ஒரு ஷாட்டும், சிவாஜி படத்தில் “தீ தீ… ஜெகஜோதி ஜோதி…” பாடலில் வரும் ஒரு துப்பாக்கி ஸ்டைலை இதிலும் நிகழ்த்துகிறார். ரஜினியின் ஹேர் ஸ்டைலும் சிவாஜி படத்தை நினைவுபடுத்துகிறது

கலெக்டர் ரஜினி மக்களுக்கு நடுவில் பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து நடந்து வருவது, படையப்பா ஸ்டைலில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருப்பது, கோட்டை தூக்கி தோளில் போட்டு வருவது என்று காட்சிகள் இடம் பெயர்கிறது.

டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்க்கும்போது ஆங்கிலேயர் ஆட்சியில் ராஜ லிங்கேஸ்வரன் கட்டிய அணைக்கு நிகழ்காலத்தில் ஒரு ஆபத்து வருகிறது. அதனை இன்றைய ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை என்பது தெளிவாகிறது.

பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் பிரம்மாண்டமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. டீசரில் 6 கெட் அப்புகள் காட்டப்படுகிறது. ஆனால் படத்தில் மூன்றாவதாக ஒரு ரஜினி இருக்கிறார்.

அது எந்த இடத்திலும் இடம்பெறாமல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி 80களில் இருந்த அதே தோற்றத்துடன், இருப்பதுதான் டீசரின் ஹைலைட்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →