விமலின் கிளாமர் ஹுயூமர் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே மற்றும்  ஆர்.சர்வண் தயாரிக்கும் படம்  “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “

விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.                                                                  

மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன்  போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு  –    கோபி ஜெகதீஸ்வரன்

இசை           –    நடராஜன் சங்கரன்

பாடல்கள்           –    விவேகாகலை  –    வைரபாலன் 

நடனம்  –     கந்தாஸ்

ஸ்டண்ட்   –    ரமேஷ்.

எடிட்டிங் –  தினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை  –    சுப்ரமணி

தயாரிப்பு நிர்வாகம் –  பி.ஆர்.ஜெயராமன்தயாரிப்பு  –  சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய மன்சூர் அலிகான், “கஜா புயலின் பாதிப்பு மிக அதிகம் .

இன்னும் நிறைய நிவாரண பொருட்கள் மக்களுக்கு தேவைப்படுகிறது . என் கையில் எதுவும் இல்லாமல் தீர்ந்து விட்டதால் திரும்பி வந்து விட்டேன் .தென்னை முதலிய பயிர்களின் இழப்பு மூலம் ஏற்பட்டு இருக்கும் நஷ்டம் இன்னும் பல வருடங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் .

கோடியக் கடல் , கோடியக்கரை பகுதி மிருகங்கள் எல்லாம் செத்து விட்டன ” என்றார் . 

படம் பற்றி பேசிய இயக்குனர், “இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்..சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.

கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம் 

அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்…அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம்.கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும் , சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.” என்றார் 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *