செய் @ விமர்சனம்

ட்ரிப்பிள் டர்ட்டில் பட நிறுவனம் சார்பில் மன்னு தயாரிக்க, நகுல், ஆன்சல் முஞ்சால், பிரகாஷ் ராஜ், நாசர்,

தலைவாசல் விஜய் நடிப்பில் ராஜ் பாபு எழுதி இயக்கி இருக்கும் படம் செய் . செய்கிறதா ? இல்ல வச்சு செய்யுதா ? பேசுவோம் . 

சிறு கடைகளின் விளம்பர போர்டு படங்களுக்கு போஸ் கொடுத்து சம்பாதித்துக் கொண்டு சினிமா நடிகனாக முயலும், 
 
சரவெடி சரவணனின் ( நகுல்) தந்தை ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் ( பசங்க சிவகுமார்) 
 
அப்பாவுக்கு மாரடைப்பு வர . அவரை காப்பாற்ற உதவும் ஓர் இளைஞன் மருத்துவமனைக்கு அனுப்புகிறான் .
 
அப்பா பிழைக்கிறார் . ஆனால் ஒய்வு எடுக்க வேண்டிய நிலை . 
 
எனவே சரவணன் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றப் போகிறான் . அரசு மருத்துவமனை பிண அறையில் உள்ள ஒருவரை, 
ஒரு முதியவர் ( நாசர்) மற்றும் சிலர் தங்கள் கிராமத்துக்கு கொண்டு போக சரவணன் ஆம்புலன்ஸ் ஓட்டிப் போகிறான் . 
 
அந்த நபர்கள் யாரும் பிணத்தின் உறவினர் இல்லை என்பதும் அந்த பிணத்தை திருட்டுத் தனமாக கைப்பற்றி எரிக்க முயல்பவர்கள் என்பதும், 
 
சரவணனுக்கு தெரிகிறது . பிணம் யாரென்று பார்த்தால் .. அப்பாவை காப்பாற்றிய இளைஞன். 
 
தொடரும் காட்சிகளில்,  முன்பு மன நல மருத்துவமனை ஒன்று  நோயாளிகள் உட்பட பலரோடு எரித்துப் பொசுக்கப்பட்டதும் ,
 
நல்ல வகையில் அதற்கு உதவி செய்து வந்த அமைச்சர் கொல்லப் பட்டதற்குமான முடிச்சு பிணமாக உள்ள, 
அந்த பத்திரிகையாளர் இளைஞனின் போனில் உள்ள ஒரு வீடியோவில் இருக்கிறது . 
 
ஒரு நிலையில் அந்த ஆதாரத்தை பத்திரமாகக் கொண்டு வந்து குற்றவாளிகளை அடையாளம் காட்டும் வேலையை, 
 
செய் என்று சரவணனிடம் சொல்கிறார் உயர் போலீஸ் அதிகாரி (பிரகாஷ் ராஜ் ) 
 
செய்ய முடிந்ததா சரவணனால் என்பதே இந்த [படம் . 
 
இதில் முதல் படத்துக்கு கதை தேடி அதற்காக சுவாரஸ்யமான நபர்களை பின் தொடர்ந்து அந்த வகையில்
 
சரவணனை பின் தொடர்ந்து அவனுக்கு உதவும் கதாநாயகி (ஆன்சல் முஞ்சால்). அது ஒரு டிராக் . 
 
நக்கல் யதார்த்தமாக இல்லாவிட்டாலும் உற்சாகமாக நடிக்கிறார் . 
ஆன்சல் முஞ்சால்  கழுத்துக் கீழே கவர்கிறார் . 
 
தலைவாசல் விஜய் யதார்த்தம் . பிரகாஷ் ராஜ் மிடுக்கு . 
 
விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது . 
 
படம் ஒரே நேரக் கோட்டில் போய் முடிகிறது . 
 
ஒரு கதை கூட சுவாரஸ்யமாக பண்ண முடியாத ஹீரோயின்,  டைரக்டர் ஆகி என்ன கிழிக்கப் போகிறார் என்பது முதல்
 
பல யதார்த்தமற்ற – அல்லது யூகிக்க முடிந்த காட்சிகள் அதிகம் இருப்பதை தவிர்த்து இருக்கலாம் 
 
குற்றவாளி யார் என்பதில் சஸ்பென்சைக் காப்பாற்றி அசத்தி இருக்கிறார் ராஜ் பாபு .  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *