தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் மற்றும் பிரபு தயாரிக்க, யோகேஷ், குரு சோமசுந்தரம்,அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன், ஒய் ஜி மகேந்திரன், நடிப்பில் பாபு தமிழ் இயக்கி இருக்கும் படம் ‘க்’
பெரும் பணக்காரர் சந்திரசேகரின் (ஜீவா ரவி) மகனான கால் பந்தாட்ட வீரன் வசந்த்துக்கு (யோகேஷ்) , நடக்கும் சில சம்பவங்கள் இயல்புக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் மற்றும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன . ஆழத்தோடு உற்றுப் பார்க்கும் யாரோ ஒரு சிறுமி, மேலே மோதி இறக்கும் புறா .. இப்படி .
அவனது மனைவி தன்யா (அனிகா) அவனை இயல்புக்குக் கொண்டு வர முயல்கிறான் .
விபத்தில் சிக்கிய வசந்துக்கு உதவியாக இருக்க, அப்பா ஏற்பாடு செய்த நபரான ஞான பிரகாசம் ( குரு சோம சுந்தரம்) பேசும் சில விஷயங்கள் வசந்துக்கு பிடித்தாலும் தன்யாவுக்கு பிடிக்கவில்லை.
இதற்கிடையே வசந்த் கண்ணில் ஒரு கொலைக்காட்சி தெரிய, விசாரித்த போலீஸ் அதிகாரி அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்கிறார் . அந்த அந்த விசயத்தில் இருவருக்கும் சண்டை வந்து சமாதானமாகிறது .
யாரோ சிலர் வசந்தை தாக்குகின்றனர் .
இதற்கெல்லாம் காரணமாக இயக்குனர் பாபு தமிழ் அமைத்து வித்தியாசமான சம்பவங்களும் அதன் முடிவுகளுமே இந்த க்.
க் என்பது பூடகமாக சிக்கலைக் குறிக்கும் .
“அவன் பேசும்போதே க் வச்சுதான் பேசுவான். “
போன்ற சொலவடைகளைக் கேட்டு இருக்கலாம்.
இந்தப் படமும் அப்படித்தான் ஒரு சிக்கலான பிரச்னையை பூடகமாக ஆனால் சுவாரஸ்யமாக சொல்கிறது .
மனோவியல் ரீதியாக சிறப்பாக காட்சிகளை அமைத்து இயக்கி மனம் கவர்கிறார் பாபு தமிழ்.
யோகேஷ் நல்ல நடிப்பு அனிகா ஒகே .
குரு சோமசுந்தரம் பிரம்மாதமாக நடித்துள்ளார்.
ஆடுகளம் நரேன் , ஒய் ஜி மகேந்திரன் ஆகியோரும் சிறப்பு
படத்தில் வரும் சின்ன சின்ன பெண் கதாபாத்திரங்களுக்கு கூட வித்தியாசமான முகங்களைப் போட்டு விவரிக்க முடியாத உணர்வுக்கு ஆளாக்குகிறார் இயக்குனர் பாபு தமிழ்.
படத்தின் மிகப்பெரிய பலம் கவாஸ்கர் அவினாஷின் இசை .காட்சிகளுக்கு அப்படி கனமூட்டுகிறது அவரது பின்னணி இசை. கே எஸ் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் சிறப்பு .
கடைசி நேரத்தில் திரைக்கதை பாயும் நிதானமான அபாரமான பாய்ச்சல் பாராட்ட வைக்கிறது .
க்….. வித்தியாசமான சுவையான அனுபவம்