‘ராப்’ உடன் மண்ணின் இசை கலந்த, இளையராஜாவின் ‘ஓய்’

oye 9

இயக்குனர்கள்  ராஜா , ‘ஜில்லா’ நேசன் ஆகியோரிடம் பணியாற்றிய  பிரான்சிஸ்  மார்க், தனது மார்க்  ஸ்டுடியோ பிரைவேட் லிமிட்ஸ் சார்பில் தயாரித்து கதை  திரைக்கதை எழுதி இயக்க, 

குறையொன்றும் இல்லை , ஆகோ  ஆகிய படங்களில் நடித்த  கீதன் பிரிட்டோ  நாயகனாக நடிக்க, சில தெலுங்குப் படங்களில் நடித்து இருக்கும் ஈஷா  நாயகியாக நடிக்க, 
இசைஞானி இளையராஜாவின் 1001 ஆவது படமாக வருகிறது  ஒய் .
oye 8
யுக ராஜ் ஒளிப்பதிவு . மணி மொழியன்  கலை இயக்கம் . என் . பாஸ்கரன் வசனம் . மணியின் மணியான படத் தொகுப்பு . 
எளிதான பெயராக  இருந்தாலும் அது என்ன ஓய்?
இலகுவாக  தெளிவாக பேசுகிறார் பிரான்சிஸ் மார்க்.
“ஓய்  என்பது பொதுவாக  அழைப்புச் சொல் , பிராமண  சமூகத்தில் என்ன ஓய் என்பார்கள் .
oye 5
சில வழக்கு மொழிகளில்  ஒருவருக்கான மெல்லிய எதிர்ப்பை தெரிவிக்கும்போது ”ஓய் என்ன கிண்டலா? ” என்பார்கள் .
(சில  பகுதிகளில் இந்த  ஓய் என்பது அழைப்புக்கு பதில் சொல்லும் வார்த்தையாகவும்  இருக்கிறது . உதாரணம் … ஏ … ராமாத்தா … என்றால்  தூரத்தில் உள்ள ராமாத்தா  ”ஓய்….’ என்பார் )
ஒய் என்ற வார்த்தைக்கு ஒய்வு என்றும் ஒரு பொருள் இருக்கிறது .
oye 7
இப்படி  தமிழ் அகராதியில் இந்த வார்த்தைக்கு உள்ள பல்வேறு அர்த்ததங்களில்  ஜோடனை  என்பதும் ஒரு அர்த்தம் .
ஒரு விசயததை  பொய் சேர்த்து சுவாரஸ்யமாகச்  சொன்னால் “நல்லா ஜோடிகிறான் பாரு…” என்பார்கள் இல்லையா ? அந்த வகையில்தான் படத்துக்குப் பெயர் வைத்துள்ளேன் ” என்கிறார் . 
எனில் படத்தின் கதை ?
oye 888
” ஒரு பெண்ணும் ஆணும் ஒரு முறை சந்தித்துக் கொள்கிறார்கள். அவனை ஓய் என்று அழைக்கிறான் அவள் . அவனோ ஒரு திருப்பத்தில்  கடந்து விடுகிறான்.
பின்னர் இன்னொரு  சூழலில் அவன் அவளை  ஓய் என்று அழைக்கிறான். அவள் போய் விடுகிறாள் . 
அவனது வீட்டுக்கு  செல்லும் அவள்,  அங்கே என்ன ஜோடிக்கிறாள்  என்பதுதான் கதை . இதற்கு மேல் கதையை  திறந்து  சொல்ல முடியாத  சூழல். படத்தில் உங்களை மிகவும் கவரும் இந்தக் கதை ” என்கிறார் . 
படத்தில்  வேறு என்ன ஸ்பெஷல் ?
oye 99
“சுமார்  பத்து வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் மீண்டும் சிலம்பச் சண்டையை  பிரதானமாகச்  சொல்கிறோம்.
சும்மா அதை ஒரு காட்சிக்காக மட்டும் வைக்காமல், கதையில் மிக பொருத்தமாக  வைத்துள்ளோம் . அது படத்தில் ரசிக்கும்படியாக இருக்கும் . 
பழம்பெரும் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் இந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக இருப்பதோடு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.
oye 4
அவரும் இளம் நகைச்சுவை நடிகர் அர்ஜுனும் தாத்தா பேரனாக காமெடியில் கலக்கி உள்ளார்கள் 
படத்தின் மிகப் பெரிய பலம் இசைஞானி இளையராஜாவின் இசை . அவரிடம் இசைக்கு போன போது பலரும் பயமுறுத்தினார்கள் .
ஆனால் ‘அவரில்லாமல்  இந்தப்  படத்தைச்  செய்ய முடியாது’ என்று உணர்ந்து அவரிடம் போனேன் . எனக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அக்கறையோடு பேசி, கதை கேட்டு அற்புதமான இசை கொடுத்துள்ளார் .
oye 999
அவரோடு சேர்ந்து காதலுக்கு மரியாதை கொடுத்த சங்கிலி முருகன் சாரும் என்னுடன் இருப்பது எனக்கு பெரிய உதவியாக இருந்தது 
படத்தின் டீசருக்கு ராஜா சார்  கொடுத்துள்ள இசையையே ரசிகர்கள் கொண்டாடுவது சந்தோஷமாக இருக்கிறது . படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் . ஐந்தும் ஐந்து விதமாக  இருக்கும் .
அதுவும் ஒரு பாடலை ராப் இசையில் தூள் கிளப்பி சட்டென்று ஒரு இடத்தில் நமது மண்ணின் இசைக்கு ராஜா சார் மாற்றுவார் பாருங்கள் . அற்புதமான விருந்து அது 
oye 88இப்படியாக மிக சிறப்பான , இயல்பான,  யதார்த்தமாக உள்ளம் கவரக் கூடிய படமாக ஒய் இருக்கும்” என்கிறார் பிரான்சிஸ் மார்க் .
கீதன்  பிரிட்டோ கூறும்போது  “படத்தில் வரும் சிலம்பச் சண்டை  மிக சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை சிலம்பப் பயிற்சிக்கு அனுப்பினார்கள் .
சங்கிலி முருகன் அய்யா தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எனக்கு போன் செய்து நான் பயிற்சிக்கு போகிறேனா என்று  உறுதி செய்து கொள்வார் .
oye 6
அவர் மற்றும் இயக்குனர் உட்பட என் மீது காட்டிய அக்கறை  மறக்க முடியாதது ” என்கிறார் .
“நான் படத்தொகுப்பு செய்ய இளையராஜா சார் இசை அமைக்கும் முதல் படம் இது . அவர் பாராட்டும்படி படத் தொகுப்பு அமையவேண்டுமே என்று பதட்டமாக இருந்தேன் .
எடிட்டிங்கில்  ரொம்ப நெருக்கிப் பிடித்தால் , “இதுல நான் எங்கே இசை அமைக்கிறது?’ன்னு அவர் கேட்பார் னு சொல்வாங்க . அதனால அவர் படம் பார்க்கும்போது பதட்டமா இருந்தேன் .
வெளியே வந்து ரொம்ப நல்லா இருக்குன்னு எல்லாரையும் பாராட்டிட்டுப் போனார் ரொம்ப சந்தோஷமா இருந்தது ” என்கிறார் மணி, துள்ளலோடு .
oye 3
வசன கர்த்தா  பாஸ்கரன் ” இது அருமையான கிராமத்து படம்  சுவாரஸ்யமான கதை . காமெடிக்கும் பஞ்சம் இல்ல . சங்கிலி முருகன் சார் ,அர்ஜுன் காமெடி ஆகட்டும் ,  படத்தில் வரும் மத்த சீன்கள் ஆகட்டும் ..
இது காமெடியில் கலக்குற படமா வந்திருக்கு . ரசிகர்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை சந்தோஷமா சிரித்துக் கொண்டே  இருப்பாங்க ” என்கிறார் . 
படத்துக்குப் பாடல் எழுதி இருக்கும் கவிஞர் விவேகா ” மாபெரும் இசை மேதையான இசைஞானி இளையராஜாவுடன் இந்தப் படத்தில் இணைந்தது சந்தோஷமான விஷயம்.
oye 2
அந்த அரிய வாய்ப்பை தந்த பிரான்சிஸ் மார்க்குக்கு நன்றி . எப்படி வார்த்தைகளை  போடுவது எப்படி வரிகளை அமைப்பது என்பது குறித்து இசைஞானியிடம் பல விசயங்களை தெரிந்து கொண்டேன்.
அவருக்கு என் மனப்பூர்வமான நன்றி  ” என்றார் 
வெற்றிகரமா வரட்டும் ஓய் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →