மென்பனி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் நட்டி, வித்யா பிரதீப், முனீஷ்காந்த், முருகானந்தம் நடிப்பில் சாய் கார்த்திக் எழுதி இயக்கி இருக்கும் படம். முடிவில்லாமல் தொடர்வது என்று பொருள்.
அடுத்தடுத்து பெண்கள் , குழந்தைகள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர். விசாரிக்க சி பி ஐ அதிகாரி (நட்டி) நியமிக்கப்படுகிறார். அவருக்கு மாநில காவல்துறைக்கும் ஆகவில்லை . அதையும் மீறி விசாரிக்கிறார்.
அவருக்கு ஒரு உதவியாளர் (முருகானந்தம்) . ஒரு காவலரின் ( முனீஷ்காந்த்) அவருக்கு கீழ் உதவுகிறார் . ஒரு மருத்துவருக்கும் ( வித்யா பிரதீப்) சி பி ஐ அதிகாரிக்கும் நட்பு உண்டு .
கொலை செய்தது யார் என்ன என்பதே படம்.
எந்த அழுத்தமும் நேர்த்தியும் இல்லாத காட்சிகளும் கதைப்போக்கும் !. எல்லோரும் தேவைக்கு அதிகமாகவே பேசிக் கொண்டே இருக்கிறார்கள் .முனீஷ்காந்த் சகிக்க முடியவில்லை. வித்யா பிரதீப் மட்டும் கவனிக்கும்படி செய்து இருக்கிறார்.
பலருடன் ஒரே நேரத்தில் உறவு கொள்ளும் பெண் கதாபாத்திரம் ஒரு அபத்தம் என்றால் அதற்காகவே அவரை கொலை செய்பவனை நல்லவன் என்று காட்டுவது அதை விட அபத்தம் .
படம் முடிந்தும் பதினைந்து நிமிடம் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் .
மொத்தத்தில் இன்ஃபினிட்டி… END.