‘இனிமேல்’ ஆல்பத்தில் நடிக்க இவைதான் காரணங்கள் – லோகேஷ் கனகராஜ்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில்  கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரனின் தயாரிப்பில், கமல்ஹாசனின்  வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும்  பாடல் ஆல்பம்  “இனிமேல்” ஆல்பம். இதன்  வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  

நிகழ்வில்   ஸ்ருதிஹாசன் பேசியபோது, ” முதலில் நான் “இனிமேல்” என்கிற இந்தப் பாடலை ஆங்கிலத்தில்தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் எழுந்தது. பின்னர் என் அப்பா இதற்குள் வந்தார். அவரே ‘இனிமேல்’ பாடலின் முழு தமிழ் வரிகளையும் எழுதினார். இவ்வாறு தான் “இனிமேல்’ உருவாகி இன்று இந்த மேடையில் இருக்கிறது.

நான் சிறுவயதில் இருந்தே திரையிசைப் பாடல்களுடன் சேர்ந்து பயணித்து வருகிறேன். அது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றால் மிகையில்லை. இதற்கு இடையில் Independent பாடல்கள் மீதான காதல் எனக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலுமே வளர்ந்து வந்தது. திரையிசை என்பது ஒரு மிகப்பெரிய மான்ஸ்டர் போன்றது. அதற்கு முன்னர் இன்டிபெண்டன்ட் மியூசிக் என்பது ஒரு 30 சதவீதமாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். “இனிமேல்” ஆல்பத்திற்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைக்க காரணம் என் தந்தை மற்றும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம். இது தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்திருக்கும் சலுகை.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களை எப்படித் தேர்ந்தெடுத்தேன் என்று கேட்டால், விக்ரம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில்  ஒரு முறை இவரை கேமராவில் பார்த்த  போது இவரது தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதிலிருந்து தான் இந்த எண்ணம் உதயமானது.

”இனிமேல்” பாடல் ஆல்பத்தின் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இது நான்கு நிமிடத்திற்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆழத்தை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சிதான்.  ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்  நிறைகுறைகளை கூறுவதன் மூலம், இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவர்களின் ரிலேஷன்ஷிப்பை இதன் மூலம் சீர் தூக்கிப் பார்ப்பார்கள் என்கிற ஒரு சிறு நம்பிக்கைதான். எங்கள் இருவரின் காம்போ அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் எப்போதும் மிக நேர்மையாக கருத்து சொல்லுவார். அவருக்கு எங்கள் இணை பிடித்திருந்தது என்றே கூறினார். இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் இயக்குநர் இதில் நடித்திருப்பது என் அதிர்ஷ்டம்தான். நான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  காதல் என்பது ஒரு டெலூஷன் என்பார்கள்.  அது நிறைவடையவில்லை என்றால் அது ஒரு மாயாவாகவே எஞ்சிவிடும். ஆனால் அது நிறைவடைந்துவிட்டால் அந்த மொமண்ட் Dreams Comes true” மொமண்ட்.  இது Delution-ல் இருந்து Solution நோக்கி காதல் நகரும் இடம் என்று கூறுவேன்”என்றார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும் போது,” நான் ஏற்கனவே பல இன்டர்வியூக்களில் சொல்லி இருக்கிறேன். எப்படியாவது நடித்தே ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் எல்லாம் எனக்குக் கிடையாது. முதலில் இனிமேல் ஆல்பம் பாடல் தொடர்பாக நடிக்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் என்னை அணுகிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது, மேலும் நாம் ஏன் நடிக்க வேண்டும் என்கின்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. அந்த கேள்வியுடன்தான் அவர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தது.அங்கு எனக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்தது, அந்தக் கதையை மிகவும் இயல்பாக அவர்கள் விவரித்த விதம்தான்.   எனக்கு ஏன் நடிக்கக்கூடாது என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்தியது . எனக்கு கமல் சார் அவர்களை எவ்வளவு பிடிக்கும் என்பதை பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். தமிழ் சினிமாத் துறையில் இருந்து வரும் கடந்த 9 ஆண்டு காலத்தில் நான் அவரைப் பற்றித்தான் அதிகம் பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன்.  நான் நடித்து என்னுடைய உருவம் திரையில் தோன்றப் போகும் ஓரிரு கணங்களில் திரையின் பின்னால் அவரின் குரல் ஒலிக்கப் போகிறது என்கின்ற எண்ணமே என்னை சிலிர்க்கச் செய்தது. மேலும் என் திரைப்பயணத்தில் அது ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும் என்றும் தோன்றியது. அதன் பிறகுதான் நடிக்க சம்மதித்தேன்.

இருப்பினும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற முதல் நாளே ஸ்ருதிஹாசன் அவர்களிடம், நீங்கள் உங்கள் முடிவை இன்று மாலையே மாற்றிக் கொள்ள நேர்ந்தாலும் நேரலாம். எனக்கு அதுகுறித்து ஒரு வருத்தமும் இருக்கப் போவதில்லை. எனவே எதற்கும் ஒரு பேக்-அப் நடிகர் ஒருவரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றும் கூறி இருந்தேன்.  படப்பிடிப்பு தளத்தில் படத்தின் இயக்குநர் துவாரகேஷ், மற்றும் அவரின் குழுவினர் என அனைவருமே மிகவும் நட்பாக பழகினார்கள்.  அதனால் நடிப்பது என்பது மிகவும் சவால் நிறைந்த விஷயமாக தோன்றவில்லை.

 உண்மையாகவே நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் அந்த அளவிற்கெல்லாம் இல்லை.  உண்மையாகவே எனக்கு நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்திருந்தால் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப்படம் பொல்லாதவன். அப்படத்தின் கதையைப் போல் ஒரு கதையினை ரெடி செய்து, என் அசோசியேட் இயக்குநரைக் கொண்டு அதை இயக்க வைத்து அதில் நானே நடித்திருப்பேன். ஆனால் எனக்கு அப்படி எல்லாம் எந்த ஆசையும் இல்லை.

லியோ படத்தின் டப்பிங் பணியின் போது நான் கமல் சாருக்கு போன் செய்து இப்படி ஒரு டயலாக் படத்தின் இறுதியில் நீங்கள் பேச வேண்டும் சார் என்று கேட்டுக் கொண்டேன்.  எனக்காக ஒரு நாள் ஒதுக்கி, அந்த இறுதி டயலாக்கை ஐந்து மொழிகளிலும் வந்து பேசிக் கொடுத்துவிட்டு சென்றார்.  அவரே இந்த அளவிற்கு எனக்கு உதவும் போது, ராஜ்கமல் தரப்பு என்னுடைய தாய்வீடு போன்றது.  அவர்களிடமிருந்து என்ன கேட்டு வந்தாலும்,  என்னாலும் மறுக்க முடியாது என்பதே உண்மை.

மேலும் அடுத்து மூன்று படம் இயக்குவதற்கு அட்வான்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன். அந்தப் பணிகளை துவங்கவில்லை என்றால் பிரச்சனையாகிவிடும்.  கேமரா முன் ஒரு சிறு பயம் இருந்தது. இப்பொழுது இந்த குழுவினரின் முயற்சியால் அந்த பயம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.  என் நாயகர்களுக்கு திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் டூயட் இல்லாமல் அமைவது திட்டமிட்டதல்ல. என் படத்தின் வேலைகள் எதுவுமே தடைபடவில்லை.  இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு வெறும் 3 நாட்கள் தான் நடந்தது. ஜூன் மாதத்தில் இருந்து என் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் துவங்கவிருக்கின்றன.

ஆக நடிக்க சம்மதித்ததற்கு 3 காரணங்கள் தான். மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்தது முதற் காரணம். கமல்ஹாசன் சார் இரண்டாம் காரணம், ஸ்ருதிஹாசன் மற்றும் அவரின் குழுவினர் 3வது காரணம்.

நான் சோசியல் மீடியாவில் இல்லை என்பதால், பர்ஸ்ட் லுக் வெளியானதைக் கவனிக்கவில்லை. ஆனால் சற்று பதட்டமாகத்தான் இருந்தது.  மாநகரம் படம் வெளியாகும் போது எனக்கு இந்த பதட்டம் இல்லை. ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த துறை. எனக்குப் பிடித்த வேலை என்பதால் மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்பினேன். ஆனால் நடிப்பு என்பது ஸ்ருதி மற்றும் அவரின் குழுவினர் என் மீது வைத்த நம்பிக்கை. அதனால் ஒரு பதட்டம் இருந்தது. என் உதவி இயக்குநர்களிடம் கேட்டேன்.   மீம்ஸ் எல்லாம்  காட்டினார்கள்” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *