நிகழ்வில் பேசிய எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், “இருட்டு ! இந்த பெயரை கேட்டவுடன் எல்லோருக்கும் இப்படி ஒரு பெயரா என ஆச்சர்யம். உலகில் முதலிலிருந்து இருப்பது இருட்டு தான் . வெளிச்சம் என்பது வந்து விட்டு போகிறது அவ்வளவு தான்.
ஊட்டியில் ஒரு இடத்தில் பகலிலேயே இருண்டு போய்விடுகிறது. அந்நேரத்தில் கொலைகள் நடக்கிறது. பகலில் எப்படி இருட்டுகிறது, ஏன் கொலைகள் நடக்கிறது என்பது தான் கதை. இதை துப்பறியும் இன்ஸ்பெக்டராக வாழ்ந்திருக்கிறார் சுந்தர் சி. சுந்தர் சி எனக்கு பிடித்த நடிகர் காவல் அதிகாரி பாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார்.
ஒலியமைப்பு ஒருங்கிணைபாளர் விஜய்ரத்தினம், ” இயக்குநர் எங்களுடன் இணைந்து ஒவ்வொரு சின்ன சின்ன ஒலியையும் வடிவமைப்பதில் உதவினார். படம் புதிதாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறோம் ” என்றார்.
இசையமைப்பாளர் கிரிஷ் , “எனக்கு இது – ‘அவள்’படத்திற்கு பிறகு – இரண்டாவது பேய் படம். இயக்குநர் துரை சாரை கல்லூரி காலத்திலிருந்தே பிடிக்கும். அவருடன் வேலை செய்ய முடிந்தது மிகுந்த சந்தோஷம். பேய் படத்தில் என்ன புதிதாக செய்யலாம் என ஆராய்ச்சி செய்து வேலை செய்திருக்கிறோம்.
நாயகி விமலா ராமன், “எனக்கு மிக வித்தியாசமான கதாபாத்திரம் தந்ததற்கு இயக்குனருக்கு நன்றி. சுந்தர் சி சார் உடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இந்தப்படமே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் பிடிக்கும் நம்புகிறேன் ” என்றார்.
VTV கணேஷ் , “இருட்டு” படத்தில் நடித்ததே புதிய அனுபவம் தான். சுந்தர் சி யிடம் ஒரு படம் செய்யலாம் என போனேன், அவர் இப்போது படம் இயக்கவில்லை ஒரு பெரிய படம் நடித்து தருகிறேன் என்றார். VZ துரையைஅறிமுகப்படுத்தினேன். சூப்பர் என்றார். பெரிய படமாக செய்யலாம் என்றேன். வழக்கமான படமாக இருக்ககூடாது என்று சொன்னேன்.
VZ துரை புதிதாக இஸ்லாம் சம்பந்தமாக ஒரு விசயத்தை பிடித்தார். அது பக்காவாக இருந்தது. ஊட்டியில் ஷுட்டிங் நடத்தினோம் சுந்தர் சி வீட்டுக்கே போகவில்லை அவ்வளவு டெடிக்கேட்டாக உழைத்தார். VZ துரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் ” என்றார்.
நாயகி சாக்ஷி சௌத்ரி , “இந்தப்படம் நான் நீண்ட நாளாக எதிர்பார்த்திருக்கும் கனவு. இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. சுந்தர் சி சாருடன் இணைந்து நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இப்படத்தின் கதை புதுமையாக இருந்தது. படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் VZ துரை பேசும்போது, ” இப்படத்தின் மூலமாக எனக்கு கிடைத்த அருமையான விசயம் சுந்தர் சி சாரின் நட்பு. VTV கணேஷ் சார் தான் இப்படம் உருவாக காரணம். அவர் தான் இப்படத்தை உருவாக்கினார். ஸ்கிரீன் சீன் நிறுவனத்தார் இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்கள்.
சுந்தர் சாரே ஒரு ஹாரர் இயக்குநர் அவர் படங்கள் கமர்ஷியல் கலந்து இருக்கும் அவர் ஐடியாக்கள் எல்லாம் பிரமாண்டமாக இருக்கும் “என்னுடையது வேறு மாதிரி இருக்கும். ஆனால் அவர் இந்தப்படம் முழுக்க பயமுறுத்தற மாதிரியான படமா இருக்கணும் நீங்க டைரக்ட் பண்ணுங்க நான் நடிக்கிறேன்’ என்றார். அவர் முழு ஈடுபாட்டுடன் இந்தப்படத்தில் உழைத்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத புது விசயத்தை இதில் அறிமுகப்படுத்தியுள்ளோம். ” என்றார்.
சுந்தர் சி தனது பேச்சில் “ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக காரணம். அவர் ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் என சொன்னேன்.

