ஸ்டார் மூவீஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்க , பிரஷாந்த் , சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடிக்க , வெற்றி செல்வன் என்பவர் இயக்கும் படம் ஜானி .
படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் பிரபு நடிக்கிறார் . இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆனந்த் ராஜ் நடிக்கிறார் .
சி பி ஐ அதிகாரி கதாபாத்திரத்தில் சாயாஜி ஷிண்டே, மற்றொரு கதாபாத்திரத்தில் தேவ தர்ஷினி ஆகியோர் நடிக்கிறார்கள்
இவர்களோடு கலைராணி, சந்தியா ராஜ கோபால் ஆகியோரும் நடிக்கிறார்கள் . ஒளிப்பதிவு எம் வி பன்னீர் செல்வம் .
படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் சென்னை ஹைதராபாத் பெங்களூரில் நடந்து முடிந்துள்ளது . அயல்நாட்டில் பாடல்கள் படப்பிடிப்பு மட்டும் பாக்கி உள்ளது
இந்த நிலையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினர் .
நிகழ்ச்சியில் பேசிய பிரபு ” அண்ணன் தியாகராஜன் மிக நல்ல ஒரு கேரக்டர் கொடுத்தார் . நன்றாக கவனித்துக் கொண்டார். பிரசாந்த் சிறப்பான ஹீரோ.
பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரணும்னுதான் நாங்க ஆசைப்படறோம் . பிரசாந்த் அப்பாவ எப்பவும் நல்லா பாத்துக்கணும் ” என்றார் .
பிரசாந்த் தன் பேச்சில் ” பிரபு சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் . ஆனந்தராஜ் சார் கேரக்டரும் அப்படிதான் .
நடிக நடிகையர் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக உழைத்த படம் இது ” என்றார்
ஆனந்தராஜ் ” படத்தின் கதையை தியாகராஜன் சார் சொன்ன உடன் ஒரு குறிப்பிட்ட கேரக்டரை குறிப்பிட்டு இதுல பண்றது யாருன்னு கேட்டேன் .
பிரபு சார் னு சொன்ன உடனே இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் னு சொன்னேன் . பிரபு சாரோடு நடிப்பது அவ்ளோ இனிய அனுபவம் .
தியாகராஜன் சார் , பிரசாந்த் இருவரும் காட்டிய அன்பும் நட்பும் மறக்க முடியாதது ” என்றார் கலைராணி பேசும்போது ” நடிகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அவர்களை நல்ல மன நிலையில்,வைத்து,
நடிப்பை பெறுவதில் தியாகராஜன் மிக சிறந்தவர் . ” என்றார்
தியாக ராஜன் பேசும்போது, ” படத்தின் ஆரம்பக் காட்சியே கிளைமாக்ஸ்தான் . அதில் இருந்து பரபரப்பு கடைசிவரை வளரும். பிரபு சார் படத்துக்கு பெரிய பிளஸ் .
ஆனந்தராஜ் மற்ற நடிக நடிகையர் , தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பங்களித்துள்ளனர் . படம் சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .