இந்திரஜித் பாடல் வெளியீட்டு விழா

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , அவரது மூத்த மகன் பரந்தாமன் இணை தயாரிப்பாளராக பணியாற்ற ,

தாணுவிண் இளைய மகன் கலா பிரபு இயக்கும் படம் இந்திரஜித் . இதற்கு முன்பே சக்கரக் கட்டி படத்தை இயக்கியவர் கலா பிரபு . 

படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க சொனாரிகா பதொரியா அஸ்ரிதா ஷெட்டி ஆகியோர்  கதாநாயகிகளாக  நடிக்கிறார்கள்  .
 
உடன் சுதன்ஷு பாண்டே , அமித் என்று பல நடிகர்கள் . 
 
படத்துக்கு ஒளிப்பதிவு , கவிஞர் அறிவுமதியின் மகனான ராசாமதி . 
 
படத்துக்கு இசை அமைத்து இருப்பவர் , தேவி ஸ்ரீ பிரசாத்திடம் உதவியாளராக இருந்த கே பி .நடனம் ஷோபி. சண்டைப் பயிற்சி ஸ்டன்ட் சிவா  
 
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டம் திரையிடப்பட்டது . 
 
அருமையான ஷாட்கள், அசத்தலான பாடல்கள் , சிறப்பான பின்னணி இசை , மயக்கும்  ஒளிப்பதிவு , எல்லாம் படத்தில் இருப்பது தெரிந்தது . 
 
அதுவும் கே பி யின் இசையும் பாடல்களும் மிக அருமை . 
 
நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டு தன் சிஷ்யன் கே பி யை அறிமுகப் படுத்திப் பேசிய இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ”  கே பி மிகச் சிறந்த இசை அமைப்பாளர் .
 
திறமைசாலி . உழைப்பாளி . கள்ளம் கபடம் இல்லாதவர் . இந்தப் படத்தில் அவர் கொடுத்து இருக்கும் பாடல்கள் அபாரம் .
 
இந்த படம் வெளி வந்த பின் அவர் மிகப் பெரிய இடத்தை அடைவார் .  டிரைலர் மிரட்டுகிறது . வாழ்த்துகள் கலா பிரபு   ” என்றார் . 
 
ஸ்டன்ட் சிவா தன் பேச்சில் ” படத்தில் மூன்று பெரிய சண்டைக்  காட்சிகளுக்கு மிகவும் சிரமப்பட்டு இருக்கோம் . ஒரு காட்சியில் சண்டை வீரர்கள் மிக ரிஸ்க்  எடுத்து நடித்தார்கள் . 
நான் அவர்களுக்காக  எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்டேன் .  கேட்டதை தாணு சார் அப்படியே கொடுத்தார்  . கலாபிரபு அருமையாக படமாக்கி உள்ளார் ” என்றார் . 
டான்ஸ் மாஸ்டர் ஷோபி” தாணு சார்  , தன் மகன் கேட்டதை மறுத்தாலும் மறுப்பார் . நான் கேட்டதை கொடுப்பார் .
 
அவ்வளவு அன்பானவர் . கலாபிரபு படத்தை சிறப்பாக கொண்டு வந்துள்ளார் ” என்றார் . 
 
இசை அமைப்பாளர் கே பி “பாடலும் இசையும் இவ்வளவு நல்லா வந்ததுக்கு கலா பிரபு சாரும் , தாணு சாரும்தான் காரணம் .
 
நிச்சயமா தொடர்ந்து நல்ல இசை கொடுப்பேன் .
என்னை வந்து வாழ்த்திய தேவி ஸ்ரீ பிரசாத் சாருக்கு நன்றி ” என்றார் . 
 
”இப்படி ஒரு நல்ல படத்தை எனக்குக் கொடுத்த தாணு சாருக்கும் கலா பிரபு சாருக்கும் நன்றி . தாணு சார் படத்தில் நடிக்கக் கேட்பது பற்றி அப்பாவிடம் சொன்ன போது ,
 
‘ நான் அவரை மிஸ் பண்ணிட்டேன் . நீ கண்டிப்பா தவிர்க்காமல் நடி’என்றார் . அப்படியே நடித்தேன் ” என்றார்
 
இயக்குனர் கலா பிரபு பேசும்போது ” சக்கரக்கட்டி படத்துக்குப் பிறகு நான் இயக்கும் படம் இது .
 
அந்தப் படத்தில் இருந்து மிகவும்  விலகி  வித்தியாசமான கதை , விறு விறுப்பான திரைக்கதை , என்று படத்தை உழைத்து இழைத்து உருவாக்கியுள்ளோம் .
 
கே பி யின் இசையும் ராசா மதியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலம் . கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது 
 
கவுதம் கார்த்திக் மிக சிறப்பான ஒத்துழைப்பு தந்தார் . படம் எல்லோருக்கும் பிடிக்கும் . எல்லோரையும் கவரும் ” என்றார் . 
 
கலைப்புலி எஸ் தாணு பேசும்போது ” என் மூத்த மகன் பரந்தாமன்தான் என்னிடம் எத்தனையோ பேருக்கு வாய்ப்புத் தருகிறோம்.
 
தம்பிக்கு ஒரு வாய்ப்பு தருவோம் என்றார். படம் ஆரம்பித்தோம் . 
என் பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை . படத்தை மிக அற்புதமாக உருவாக்கி உள்ளார் கலா பிரபு . மிக பிரம்மாதமாக  படம் வந்து உள்ளது . 
 
கே பி மிகச் சிறந்த இசையை கொடுத்து உள்ளார் . இந்தப் படத்துக்கு பிறகு அவர் பெரிய உயரங்களுக்கு போவார் 
 
ராசாமதியின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக வந்துள்ளது . ஷோபி பாடல்களை சிறப்பாக நடனம் அமைத்து உள்ளார் . 
 
ஸ்டன்ட் சிவா மிக உழைத்து உயிரைப் பணயம் வைத்து சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார் . 
 
கவுதம் கார்த்திக் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். அப்பாவின் கட்டளைக்கு ஏற்ப ஒரு பைசா சம்பளம் பேசாமல் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார் 
 
இப்போது அவர் நடித்த ஒரு மாதிரியான படம் ஓடுகிறது . அது எல்லாம் இருக்கட்டும் . ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு அவர் மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வருவர். 
 
படம் எல்லோரையும் ஈர்க்கும் ” என்றார்  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *