தீபாவளிக்கு தனது நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தை கொண்டு வர முயன்ற சுசீந்திரன் அது தள்ளிப் போன நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் .
” என் வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி என்றால் தளபதி படம் பார்க்கப் போய் விபத்தில் சிக்கிய தீபாவளிதான்.
வெண்ணிலா கபடிக் குழு ரிலீஸ் ஆன பிறகு குடும்பத்தில் எல்லோருக்கும் புது துணி எடுத்துக் கொடுத்து கொண்டாடிய தீபாவளி சிறப்பானது .
எனது படங்களில் இது வரை தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் பாண்டிய நாடு மட்டும்தான் .
எனக்கு பொதுவாக இரண்டாவது பாகம் எடுக்க விருப்பம் இல்லை . மீண்டும் அதே கேரக்டர்களுக்கு சீன் யோசிப்பது போரடிக்கும் விஷயம் .
மீறி எடுத்தேன் என்றால் பாண்டிய நாடு படத்தின் இரண்டாவது பாகம் எடுப்பேன் .
எனக்கு அடல்ட் காமெடி படங்களில் நம்பிக்கை இல்லை . சகலகலா வல்லவன் வந்த போதே எங்கேயோ கேட்ட குரல் என்ற நல்ல படமும் வந்து புகழ் பெற்றது .
கமலின் அரசியல் எனக்கு பிடித்து இருக்கிறது .
ரஜினியை ஒரு முறை சந்தித்துப் பேசினோம் . அவருக்கு கதை சொல்லவும் தயாராக இருக்கிறேன் . விஜய் சார் கால்ஷீட்டும் கிடைக்கல
அஜித்துக்கு ஸ்கிரிப்ட் ரெடியாக இருக்கிறது ” என்றார் .