சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க, நடிகர் ஆர்யாவின் The Show people நிறுவனம் வெளியிட, ஆர்யா கதாநாயகனாகவும் கேத்தரின் தெரஸா கதாநாயகியாகவும் நடிக்க ,
முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் உடன் நடிக்க,
ராஜ்கிரண் , விமல் நடித்த மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இப்போது ராகவா என்று, பெயரில் சிறு மாற்றம் செய்து கொண்டு
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் படம் கடம்பன்.
ஏப்ரல் 14 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையால்களை சந்தித்து படக் குழு .
திரையிடப்பட்ட முன்னோட்டம் வனப் பகுதி மக்களின் வாழ்க்கையை நகர்ப்புற கார்ப்பரேட் கலாச்சாரம் அழிக்க முயல்வதை அழுத்தமாக சொல்வதாக இருந்தது .
திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் , மீகாமன் சதீஷின் ஒளிப்பதிவு ஆகியவை அட்டகாசமாக இருந்தன.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் இனிமையாக இருந்தன. பாடல்களை மிக அழகாக ரசனையாக எடுத்து இருந்தார் இயக்குனர் ராகவா
கேமரா மென் சதீஷ் பேசும்போது “இந்தப் படத்தில் எல்லோருமே ராட்சஷ உழைப்பு உழைக்க வேண்டி இருந்தது . உழைத்தோம் . தாய்லாந்தில் யானைக் கூட்டங்கள் , காடுகள் மலைகள் அருவிகள் இடையே எல்லாம்
படப்பிடிப்பு . விபத்தை ஆபத்தை சிரமத்தை எதிர்கொள்ளாத யாருமே படக் குழுவில் இல்லை . படம் நன்றாக வந்துள்ளது சந்தோசம் ” என்றார்
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தன பேச்சில் ” ஆர்யா மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார் . படம் பாருங்கள். ஒரு காட்சி கூட டூப் இல்லை .
மரத்தில் இருந்து அவர் படுவேகமாக சறுக்கிக் கொண்டு வரும் ஒரு காட்சியில் கையில் உள்ள கிளவுஸ் கிழிந்து புகை வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ” என்றார் .
மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குனர் சாய் ரமணி பேசும்போது ” ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள் . பண்பட்ட பத்திரிக்கையலர்களுக்கு இது எல்லாம் புரியும் .
ஆனால் படம் வந்த அன்றே வீடியோ முன்பு உட்கார்ந்து விமர்சனம் என்ற பெயரில் கன்னா பின்னா என்று பேசுவது தடுக்கப்பட வேண்டும் ” என்றார் .
”இப்படி ஒரு படம் எடுக்க யோசிக்கும் போதே ஆர்யா தனது உடம்பை கட்டமைக்க ஆரம்பித்து விட்டார் . ஒரு நிலையில் அவருக்காகவே படம் எடுக்க முடிவு செய்தோம் .
படக் குழுவின் உழைப்பு பாராட்ட வார்த்தைகளே இல்லை ” என்றார் தயாரிப்பாளர் சவுத்ரியின் மகனும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் .
ஆர்யா தன் பேச்சில் ” நான் மட்டும் அல்ல எல்லோருமே படத்துக்கு கஷ்டப்பட்டோம் . தாய்லாந்தில் யானைக் கூட்டத்துக்கு நடுவே கேமரா மேன் சதீஷ் ஓடும்போது தடுக்கி கேமராவை போட்டு விழுந்து விட்டார் .
எதிரே ஓடி வந்த யானை ஏனோ நின்று விட்டது . அது மட்டும் மேலே ஏறி இருந்தால் நினைக்க முடியாத பயங்கரம் நிகழ்ந்து இருக்கும். படம் சிறப்பாக வந்துள்ளது ” என்றார்
தயாரிப்பாளர் சவுத்ரி பேசும்போது ” எங்கள் 89 ஆவது படம் . எங்கள் படத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் . ஆரம்பித்த பட்ஜெட் வேறு . அனால் போகப் போக மிகவும் பெரிதானது .
ஒரு நிலையில் நான் பயந்து விட்டேன் . ஆனால் படத்தை சிறப்பாக எடுத்து உள்ளார்கள் . அதனால் நம்பிக்கையாக உள்ளது ” என்றார்
இயக்குனர் ராகவா தன் பேச்சில் ” இன்றைய நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களால் நம் உயிரான காட்டு வளம் அழிக்கப்படுவதை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படம்.
காட்டின் வளர்ச்சியே அந்த நாட்டின் வளர்ச்சி என்பார்கள். அப்படிப்பட்ட காட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகள் என்னென்ன என்பதை விரிவாக சொல்லும் படம் தான் கடம்பன்.
கடம்பன் ஆர்யா நடித்த படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான படமாக உருவாகி உள்ளது. ஆர்யா இப்படத்திற்காக தனது உடம்பை வருத்தி கடம்பனாகவே வாழ்ந்திருக்கிறார்.
படம் இம்மாதம் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று உலகமுழுவதும் வெளியாகிறது. மஞ்சப்பை படத்தை போலவே இந்த கடம்பனும் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் ” என்றார்
வாழ்த்துகள் !








