வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தென்னிந்தியப் படம் கனவு வாரியம்

kanavu 5

1970களிலேயே பிரபலமான தென்னிந்தியாவின் முதல் பாடி பில்டர் ஆணழகன் என்று தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனால் பட்டம் கொடுக்கப்பட்டு எம் ஜி ஆரால் போற்றப்பட்ட சிதம்பரம் .

இந்த ஆணழகன் சிதம்பரத்தின் மகன் அருண் சிதம்பரம், அயல்நாட்டில் ஐ டி துறையில் வகித்த பெரும்பகுதியை உதறி விட்டு சென்னை வந்து, 

கனவு வாரியம் என்ற என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கி , தயாரித்து, பாடல்கள் எழுதி கதாநாயகனாக நடித்துள்ளார் .

தமிழ் நாட்டில் அண்மையில் நிலவிய பதினெட்டு மணி நேர மின்வெட்டுப் பிரச்னையை மையமாகக் கொண்டு  எடுக்கப்பட்டுள்ள  இந்தப் படம் ,

திரைக்கு வருவதற்க்கு முன்னரே இரண்டு ரெமி விருதுகளை பெற்று பெருமை பெற்றுள்ளது . ஏழு உலகப் பட விருதுகளையும் பதினைந்து நாடுகளின் சினிமா விழாக்களில் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது

kanavu 2
இது மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நிருவனமான வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தென்னிந்தியப் படமும் இதுதான்

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்திய  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனதின் இயக்குனர் சிவன்(ISRO),  இயக்குனர் இமயம்  பாரதிராஜா, பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,

இந்திய ரூபாய் சின்னத்தின் வடிவமைப்பாளர் உதய்குமார், நல்லகீரை என்ற அமைப்பின் பெயரில் ஆர்கானிக் தாவர உணவுப் பொருட்களுக்கென ஒரு தனி நிறுவனம் துவங்கி இருக்கும்ஜெகநாதன் மற்றும்

தமிழ்நாடு வெதர்மேன் (Weather Man) ப்ரதீப் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இசை வெளியீட்டு விழா முடிந்து நடந்த பத்திர்க்கையாளர் சந்திப்பில் இந்தப் படம் ரெமி விருது பெற்றபோது அதை வெளிநாட்டினர் பல பாராட்டுவதையும் திரையிட்டனர் .

படத்தின் முன்னோட்டம் மின்வெட்டில் கிராம வாழ்வு படும் துன்பங்களையும் , எளிய முறையில் மின்சாரம் கண்டு பிடிக்க முயலும் ஒரு இளைஞனின் வாழ்வையும் வெளிப்படுத்தியது

kanavu 1

திரையிடப்பட்ட ஒரு பாடலில் அறுபதுக்கும் மேற்பட்ட பாரம்பரிய தமிழ் கிராம விளையாட்டுக்களை காட்டிய விதம் அருமை
விழாவில் கலந்துகொண்ட பிரபல பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில் இப்போதுள்ள இளைஞர்கள் கணிணியில் வேலை பெரு நிறுவன (corporate) வாழ்க்கை என்று இல்லாமல்,

மீண்டும் ஆரம்பகால இயற்க்கை விவசாயத்தை பின்பற்றுவது பெருமையக இருக்கின்றது  என்னுடைய மகனும் இப்பொழுது இயற்கை விவசாயத்தை மேற்க்கொள்வது எனக்கு பெருமை அளிக்கிறது” என்றார்

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் இயக்குனர் கவுரவ் சபர்வால் பேசும்போது ” ரெமி விருதுகளை வென்ற இந்தப் படம் மிக சிறப்பாக வந்துள்ளது .

ஒரு சிறப்பான படத்துடன் தென்னிந்திய மொழிகளில்  வெளியீடுகளில் ஈடுபட விரும்பிய நாங்கள் இந்தப் படத்தின் மூலம் சந்தோஷமாக தென்னிந்திய வெளியீடுகளை துவங்குகிறோம் ” என்றார்

kanavu 3
பாரதிராஜா பேசுகையில் “இப்போதுள்ள தமிழ் சினிமாவில் எடுக்கும் மாஃபியா படங்களுக்கு நடுவில் இப்படம் மண்வாசனயை கொடுத்திருக்கிறது
அது மட்டுமின்றி நம்முடைய பண்பாடுகளையும்,பழக்கவழக்கங்களையும் பதிவு செய்திருப்பது சிறப்பு

என்னுடைய ஆரம்ப காலங்களில் அப்போது ஸ்டுடியோவில் செட்டுக்குள் படம் எடுப்பதைப் பார்த்து எனக்கு கோபம் வரும்  கிராமம என்று அவர்கள் போட்ட செட் செயற்கையாக இருக்கும்  பெயின்ட் வாசனையே அடிக்கும் .

அதன் பின்புதான் கேமாராவை செட்டிற்க்குள் இருந்து வெளியே கிராமத்திற்க்கு எடுத்து சென்றேன்” என்றார் 

அருண் சிதம்பரம் தன் பேச்சில் ” புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும்  உருவாக்குபவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும், அதுமட்டுமல்ல அவர்களை கொண்டாட வேண்டும் .

என் படத்தை பிரபல ஹாலிவுட் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் வெளியிடுவது மேலும் ஒரு சிறப்பு” என்றார்

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனதின் இயக்குனர் சிவன்(ISRO) ”  எனக்கு ஒரு வித்தியாசமான நிகழ்வு. இந்தப் படத்தின் ஒரு பாடலை பார்க்கும்போது ,
kanavu 4
என்னுடய சிறுவயது கிராமத்து வாழ்க்கை நினைவுக்கு வருகிறது 

இந்தப் படம் gross root innovation என்று சொல்லக்கூடிய அடிமட்ட கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருப்பது இன்னுமொரு பெருமை.

மேலும் இயக்குனர் இமயம்  பாரதிராஜாவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொண்டது  மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *