கருப்பங்காட்டு வலசு @ விமர்சனம்

Crew 21 எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், 

எபினேசர் தேவராஜ், நீலிமா இசை, ஜார்ஜ் விஜய், ஆரியா, மாரி செல்லத்துரை , கவுரிஷங்கர், ஜிதேஷ் டோனி, சந்தியன் நடிப்பில்,

ஷரவன் சரவணன் ஒளிப்பதிவில் , ஆதித்யா சூர்யா இசையில் தமிழ்க் குமரன் படத் தொகுப்பில் செல்வேந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் கருப்பங்காட்டு வலசு . 

நாட்டுப்புற நடனம் ஆடும் கலைஞன் பச்சைக்கிளி வாத்தியார் (எபினேசர் தேவராஜ்) அவர் காதலிக்கும் முறைப்பெண் மல்லி ( ஆரியா).

அயல்நாட்டில் வாக்கப்பட்டு அந்தத் திருமணம் நிலைக்காமல் கிராமத்துக்கு வந்திருக்கும் பணக்காரப் பெண் காந்திமதி( நீலிமா) .

அப்பாவுக்குப் பிறகு ரயில்வே வேலை கிடைத்து , அதைச் செய்யும் புகைவண்டி வேலன் (ஜிதேஷ் டோனி) ஆகியோர் உட்பட ,பல கதாபாத்திரங்கள் கொண்ட  கிராமம் கருப்பங்காட்டு வலசு

ஊரில் திருடர் தொல்லை, சாதி வெறி என்று பல பிரச்னைகள் .

ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் காந்திமதி பொதுக் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்து, தெருவுக்கு தெரு கண்காணிப்புக் கேமராவும் பொருத்திக் கொடுக்க,

திருட்டு மட்டுமின்றி பல விஷயங்கள் வெளிப்பட, இயற்கை மரணம் உட்பட பல கொலைகளும் ஊரில் நடக்கிறது . 

விசாரிக்க வரும் காவல் ஆய்வாளரால் ( ஜார்ஜ் விஜய்) குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடிந்ததா? நடந்தது என்ன எல்லாம்?

– என்பதே இந்த கருப்பங்காட்டு வலசு. 

படம் துவங்கும்போது இது நாட்டுப்புறக் கலைஞனின் காதல் கதையோ என்று தோன்றுகிறது . நேரம் ஆக ஆக புதுப் புதுக் கதாபாத்திரங்கள், கதைப் போக்குகள்  என்று பயணித்து  எல்லா நிகழ்வுகளையும் ஒன்று கூட்டுகிறது படம் . 

எளிய கிராமத்து முகங்களும் லொக்கேஷன்களும் அழகு.

ஜார்ஜ் விஜய் , ஊரில் உதார் விட்டுக் கொண்டு அலையும் ஒருவர் தவிர மற்றவர் எல்லாம் செயற்கையாகவும் அதீதமாகவும் நடிக்கிறார்கள் . 

எது செய்தாலும் நேரா கேமாரா பார்த்துதான் நடிக்க வேண்டும் அக்கம் பக்கம் பார்த்தால் அம்புட்டுதான் என்று டைரக்டர் சொல்லி விட்டது போல  பல நடிப்புகள். . 
படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் எதிர்பாராத திருப்பங்களைத் தருவதில் மட்டும் வெற்றி பெறுகிறது கருப்பங்காட்டு வலசு . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *