விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்க,
சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் நடிப்பில் முருகானந்தம் இயக்கும் படம் கதாநாயகன்.
படத்துக்கு ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், “விஷ்ணுவிடம் குழந்தை முகம் உள்ளது.
மேலும் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும், முயற்சியும் உள்ளது. இது அவரை கண்டிப்பாக அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்
படத்தின் இயக்குனர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தை பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து,
அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப்படம் கண்டிப்பாக ஒரு பேமிலி எண்டர்டெய்னராக இருக்கும்.”என்றார்.
நடிகர் ஆனந்த் ராஜ் தன் பேச்சில் , “இப்படத்தில் முதன் முறையாக ஷேக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தின் இயக்குனர் என்னுடன் மரகத நாணயம் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது அவர் படத்தில் நான் நடித்திருக்கிறேன். படத்தில் எனது கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்துள்ளார்.
கதாநாயகன் படம் வெற்றிபெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.
இயக்குனர் முருகானந்தம், பேசும்போது ” விஷ்ணு விஷால் ஒரு நல்ல நடிகராக மட்டுமில்லாமால், ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் இருக்கிறார். படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
எங்கள் குழு எப்போதும் நகைச்சுவையாக மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். எனக்கு உறுதுணையாக இருந்த அணைவருக்கும் நன்றி. ” என்றார்.
விஷ்ணு விஷால் பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் நல்ல பெயரை பெற்று தந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் சற்று சறுக்கல்களை தந்தன.
எனினும் முயற்சியை கைவிட வில்லை. கடைசியாக என்னுடைய தயாரிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவுக்கு நன்றி.
தற்போது அதே மாதிரியான ஒரு தரமான படமாக கதாநாயகன் படம் வந்துள்ளது.
இந்த படத்திற்கு தங்கள் நல்லாதரவினை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார் .
—