பாக்கணும் போல இருக்கு” படத்தில் இடம்பெற்றுள்ள “உன் ரெட்ட சட கூப்பிடுது முத்தம்மா…” தமிழகத்தின் பட்டிதொட்டி மட்டும் இன்றி,
ஆஸ்திரேலியா, கனடா போன்ற வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் ஃபேவரைட் பாடலாகவும் பெயர் பெற்று விட்டது
இந்த ஒரே ஒரு பாடல் மூலம் புகழ்பெற்ற பாடகர் பவன் .
கர்நாடக இசை மற்றும் வெஸ்டர்ன் இசையை முறைப்படி கற்றுத்தேர்ந்துள்ள பவன்,
இசைத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன்,
பல வருடங்களாக கோரஸ் பாடகராக பணியாற்றியவர் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பல ஆண்டுகள் பாடி வருகிறார்.
கர்ணன் திரைப்படத்தில் இடம்பெறும் “உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்ற பாடல் முழுவதையும், அப்படியே பாடும் திறன் படைத்த இவர்,
அதற்காக மெல்லிசை மன்னர் எம் .எஸ்.வி அவர்களிடம்பாராட்டுப் பெற்றிருக்கிறார்.
இப்படி மேடை இசை நிகழ்ச்சிகள் கோரஸ் என்று இருந்த பவன், கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபிக்க தவறியதில்லை.
‘கத்துக்குட்டி’, போட்டா போட்டி’, ‘பாண்டியநாடு’ என்று இவர் பாட்டு பாடிய படங்கள் அனைத்தும் ஹிட் .
இப்போது “உன் ரெட்ட சட கூப்பிடுது முத்தம்மா..” பாடல் மூலம் இப்போது பல வாய்ப்புகள் வருகிறதாம்.
எப்.சி.எஸ் கிரியேசன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பில், அருள்தேவ் இசையமைப்பில்,
எஸ்.பி.ராஜ்குமார் வரிகளில் உருவான இப்பாடல் பெற்ற மிகப்பெரிய வெற்றியால், இக்குழுவினர் தொடர்ந்து பாடகர் பவனுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.
” இசையை முறைப்படி கற்றதால், இசையமைப்பாளர்கள் பாடல் கொடுத்தால், அதை எப்படி மெருகேற்ற வேண்டும் என்பதை அறிந்து நோட்ஸ் எழுதி நான் பாடுவதால்,
இசையமைப்பாளர்கள் உருவாக்கிய அந்த பாடலின் தனித்துவம் மாறாமல் இருக்கும்.
என்னால் குத்துப்பாட்டு, மெல்லிசை பாட்டு மட்டுமல்ல வெஸ்டன் பாடல்களையும் அதன் ஃபிளேவர் மாறாமல் பாட முடியும்”, என்று
அடக்கமாக கூறும் பவன், தற்போது ‘நான் அவளை சந்தித்தபோது’, ‘இதெல்லாம்’, ‘வெளியில தல காட்ட முடியல’, ‘துப்பார்க்கு துப்பாய’ உள்ளிட்ட பல படங்களில் பாடி வருகிறார் .