கன்னடத்தில் பிரபலமான ஹீரோவான யாஷ் நாயகனாக நடிக்க, ஹோம்பெல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கே ஜி எஃப் . (KGF).
கோலார் தங்க வயல் என்பதன் சுருக்கமான இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள் . பிரஷாந்த் நீல் என்பவர் இயக்குகிறார் .
கே ஜி எஃப் . (KGF). என்ற பெயரிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளிவருகிறது .
நான்கு மொழிகளில் 21 ஆம் தேதி வெளிவரும் இந்தப் படத்தை தமிழில் விஷால் தனது விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் வெளியிடுகிறார்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்க, தங்க வயல்கள் அதிகம் தோண்டப்படுகின்றன .
அப்படி கர்னாடக மாநிலம் கோலார் தங்க வயலை உருவாக்கிய அனைவரும் தமிழர்களே .
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் யஷ்ஷின் நற்குணங்களை விஷால் புகழ்ந்தார் ” யஷ்ஷின் அப்பா இன்னும் டிரைவராக இருக்கிறார் ” என்றார் .
“எனக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் யஷ்
21 ஆம் தேதி வெளிவருகிறது கே ஜி எஃப் . (KGF).