கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குனர்வெ ற்றிமாறன் தயாரிக்க, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன் வெளியிட,
தனுஷ், திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்க , தூதரை.செந்தில்குமார் இயக்கி இருக்கும் படம் கொடி.
தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனுஷ் ,
வெற்றிமாறன் , மதன் , இணை தயாரிப்பாளர் கோபால் ஜேம்ஸ் ,அனுபமா பரமேஸ்வரன் , இயக்குநர் துரை செந்தில் குமார் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ,
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் , படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு , நடன இயக்குநர் பாபா பாஸ்கர் , நடிகர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசியபோது
“இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் முதன் முதலில் கதை சொல்லும் போது அவரை தனுஷ் சாரிடம் கதை சொல்லுமாறு கூறினேன்.
அவர் தனுஷ் சார் தயாரிப்பில் இரண்டு வெற்றி படங்களை உருவாக்கினார். இப்போது நான் தனுஷ் சார் நடிப்பில் – துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை தயாரித்துள்ளேன்.
எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த படத்தில் பெயருக்குதான் தயாரிப்பாளர் என்று கூறுவேன். நான் தனுஷ் சாரிடம் உங்களை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டவுடன்.
தனுஷ் சார் உடனே துரை செந்தில் குமார் என்னிடம் கூறியுள்ள கதையை நீங்கள் தயாரியுங்கள் என்று கூறினார்.
இப்படி என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணமாக இருந்த தனுஷ் சாருக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூற வேண்டும் “என்றார்.
தனுஷ் தனது பேச்சில் “இதுவரை நான் நடித்த புதுப்பேட்டை போன்ற திரைப்படங்களில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க அரசியலைப் பற்றிப் பேசும் படமாக இருக்கும்.
அரசியல் பற்றி இளைஞர்களுக்கு கருத்துக் கூறும் படமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு மிகச் சிறந்த இசையைக் கொடுத்துள்ளார்
அவருக்கு நன்றி. நான் குக்கூ திரைப்படத்தில் இருந்து அவருடைய இசையை கவனித்து வருகிறேன். இப்படத்தில் அவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சி. படத்திற்கு நான் டப்பிங் பேசி முடித்துவிட்டேன்.
நான் முதன் முதலில் நடிக்கும் ரெட்டை வேடத்தில் நடிக்கும் படம் இது.
படத்தின் கதையை இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் கூறிய போது, ‘ நாம் ரெட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து நடித்தேன். படம் ரொம்ப சிறப்பாக வந்துள்ளது.
இந்தப் படத்தில் 8 வருடமாக ஒன்றாக பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் அனைவருக்கும் இது முக்கியாமான திரைப்படமாக இருக்கும் என்று கூறினார்.
இயக்குநர் துரை செந்தில் குமார் தனது பேச்சில்
“பல அரசியல் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகரன் இந்தப் படத்தில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதையை கேட்டவர் ஆரம்பத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.
சிறிது நேரம் கழித்து எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். முதலில் என்னுடைய
காரணம் அவர் வீட்டிற்குச் சென்று கதை கேட்ட விஷயத்தைப் பற்றி ஷோபா மேடத்திடம் கூறியதும், அவர் “தனுஷ் படத்தில் நடிப்பது மிகப் பெரிய வாய்ப்பு அதில் நீங்கள் எப்படி நடிக்க மறுக்கலாம்?
நாங்கள் அனைவரும் தனுஷின் ரசிகர்கள் நீங்கள் கண்டிப்பாக கொடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியதாகக் கூறினார்.
நான் எப்போது கதை எழுதினாலும் என்னுடைய மனதில் தனுஷ் சார் தான் வருவார். அவர் தயாரித்த இரண்டு திரைப்படங்களை நான் இயக்கிவிட்டேன்.
இப்படத்தை அவரை வைத்து இயக்கியுள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு சிறந்த இசையை கொடுத்துள்ளார் , அவருடைய வீட்டிற்கு சென்றாலே நல்லதொரு மனநிலை வரும்.
இந்த இடத்தில் நமக்கு நல்ல இசை கிடைக்கும் என்று தோன்றும் அதே போல் தான் அவருடைய ஸ்டுடியோவும் ,
எனக்கு நல்ல சூழலையும் நல்ல இசையும் தந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி.? என்றார் .