கொளஞ்சி @ விமர்சனம்

ஒயிட் ஷாடோஸ் புரடக்சன் சார்பில் இயக்குனர் நவீன் தயாரிக்க , சமுத்திரக் கனி, சங்கவி, கிருபாகரன், நாசத் ,ராஜாஜி, நெய்னா சர்வார், ரஜினி, பிச்சைக்காரன் மூர்த்தி நடிக்க, தனராம் சரவணன் எழுதி இயக்கி இருக்கும் படம் கொளஞ்சி. 

பெரியாரின் வழி நடக்கும் அப்பாசாமியின் ( சமுத்திரக் கனி) மூத்த மகன் கொளஞ்சி (கிருபாகரன்) , பள்ளியில் ஒழுங்காகப் படிக்காமல் ஒழிசலாக  தவறான எண்ணங்கள் கொண்ட  சிறுவனாக வளர்கிறான் . அதே நேரம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் . அவனது நண்பன் அடிவாங்கி ( நாசத்)
 
அப்பாசாமியின் அண்ணன் மகளுக்கும் ( நைனா சர்வார்) அப்பாசாமியின் மனைவியின் (சங்கவி) அண்ணன் மகனுக்கும் (ராஜாஜி) காதல் . அந்த காதலுக்கு  கொளஞ்சி உதவுகிறான் . 
 
நாத்திகம் பேசும் அப்பாசாமிக்கும் சாதி ஆணவம் பேசும் வேலப்பனுக்கும் ( மூர்த்தி)  பகை. 
 
ஒரு நிலையில் பரிட்சையில் பெயில் ஆகும் கொளஞ்சி அதில் இருந்து தப்பிக்க, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வரும் சண்டையை பெரிது படுத்தி அவர்கள் பிரியவே காரணம் ஆகிறான் . 
 
அக்கா-  மாமாவின் காதலுக்கு உதவினால் அவர்கள் கல்யாண சமயத்தில் அப்பா அம்மா சேர்ந்து விடுவார்கள் என்று எண்ணி அந்தக் காதலையும் கலைத்து விடுகிறான் . 
 
இந்த நிலையில் அப்பாசாமிக்கும் வேலப்பனுகும் உள்ள பகை ஒரு நிலையில் முட்டிக் கொள்ள அப்புறம் என்ன ஆனது என்பதே கொளஞ்சி . 
 
வசமான கிராமத்துக் கதை. குடும்ப உறவுகள் பற்றிய கதை . படத்தின் சிறப்புகள் இவை . தனது சமூக அக்கறைக் கருத்துகளால் உறவுகள் மட்டும் ஊராரால் வித்தியாசமாகப் பார்க்கப்படும் நாயகன்  , மிக சிறப்பான கதாபாத்திரம் . அருமை 
 
பெரியார் தொண்டர் கேரக்டரில் சமுத்திரக்கனி ஈர்க்கிறார் 
 
பள்ளி செல்லும் மகன் பற்றிய கதை என்பது பாராட்டுக்குரியது . 
 
கொளஞ்சி கிருபாகரன், அடிவாங்கி நசத் ஆகியோரின் நடிப்பு சிறப்பு . நசத் அங்காங்கே சிரிக்க வைக்கிறார். வில்லனாக பிச்சைக்காரன் மூர்த்தி பாராட்டும்படி நடித்திருக்கிறார். 
 
தமிழன் பெருமை சொல்லும் பாடலுக்கு பாராட்டுகள். ஆனால் இரவிலும் குடை பிடித்துக் கொண்டு  திரியும் ஒரு கதாநாயகன் ( சென்ட்ராயன்) அந்தப் பாடலை பாடுகிறார் என்பதில் ஏதோ ஒரு வஞ்சக  உள்குத்து !
 
திணிக்கப்பட்ட  டூயட் பாடல்கள் ! 
 
ஒரு ஸ்கூல் பையன் நினைத்தால் கெடுத்து விடுமளவுக்கு தம்பதியும் காதல் ஜோடியும் இருக்கிறது . அதுவும் அந்த காதலி , காதலனைப் பற்றி யார் என்ன சொன்னாலும்  கபால் கபால் என நம்புகிறார் . 
 
தவறு செய்தால் பொறுப்பு இல்லாமல் இருந்தால் எல்லோரும் வெறுக்கத்தான் செய்வார்கள் . கண்டிப்பார்கள். அதற்காக அவர்கள் மேல் கோபப் படக் கூடாது. வஞ்சம் வைக்கக் கூடாது என்பதை கடைசிவரை கொளஞ்சியிடம் யாருமே அழுத்தமாக சொல்லவில்லையே . 
 
திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். 
 
எனினும் மூட நம்பிக்கை , சாதி ஆணவம் இவற்றுக்கு எதிராக பேசும் படம் என்ற வகையில் பாராட்டுக்கு உரியவன் இந்த கொளஞ்சி 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *