ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹனிபா, ராம மூர்த்தி, மகாலட்சுமி, ஜோமோல், நடிப்பில் கே ஆர் ஸ்ரீஜித் எழுதி இயக்கி இருக்கும் படம் கொன்று விடவா .
கொடைக்கானல் பகுதியில் தங்கும் விடுதி வைத்து இருக்கும் ஒருவர், கார் டிரைவர் ஒருவர் மற்றும் ஒருவர் மூவரும் கூட்டணி ஜாலி பேர்வழிகள் .
அங்கே ஊழியராக பணியாற்றும் ஒரு வயதான நபர் . அவருக்கு விபத்தில் காலில் அடிபட்டு சக்கர நாற்காலியில் இயங்கும் ஒரு மகள் ( மகாலட்சுமி).
அவளை அன்போடு பார்த்துக் கொள்ளும் ஒரு தோழி(அஸ்வதி), அந்தத் தோழியின் அப்பாதான் தங்கும் விடுதியின் ஓனர் .
சக்கர நாற்காலிப் பெண்ணை அக்கா போல பார்த்துக் கொண்ட ஒரு பெண் கொல்லப்படுகிறார் . அவர் பேயாக வந்து சக்கர நாற்காலிப் பெண்ணை எழுந்து நடக்க வைக்கிறார் .
விடுதி ஓனர் உட்பட பலரைப் பழி வாங்குகிறார் . ஏன் என்பதுதான் இந்தப் படம்
எளிமையான மேக்கிங் .
எளிய முகங்கள் .
சில பேய்க் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்கள் .
பகல் நேரத்தில் பயமுறுத்த முயற்சி செய்து இருக்கிறார்கள்.
லொக்கேஷன் கவர்கிறது .
சிறப்பு .