குற்றம் புரிந்தால் @ விமர்சனம்

அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆத்தூர் ஆறுமுகம், சுகந்தி ஆறுமுகம் தயாரிக்க, ஆதிக் பாபு, அர்ச்சனா (இனி இவர் குற்றம் புரிந்தால் அர்ச்சனா என்று அழைக்கப்படுவாராக !)  , நாடோடிகள் அபிநயா, எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் டிஸ்னி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம். 

தாய்மாமன் ( எம் எஸ் பாஸ்கர்) , அவரது மகளும்  முறைப்பெண்ணும் காதலியும்  வருங்கால மனைவியுமான  ( அர்ச்சனா) ஆகியோரோடு வாழ்ந்து வரும் நபர் ஒருவர் (ஆதிக் பாபு) 
மகிழ்வும் நெகிழ்வும் இனிய எதிர்பார்ப்புகளுமாக   அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் , வீட்டுக்குள் நுழையும் மூன்று ரவுடிகள் ஆண்கள் இருவரையும் அடித்துப் போட்டு விட்டு , பெண்ணை வன்புணர்வு செய்து குற்றுயிரும் குலை உயிருமாக ஆக்கி விட்டுப் போகிறார்கள் . 

குற்றவாளிகளுக்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் அரசு மருத்துவரும் உதவுகிறார்கள் . 
பொங்கி எழும் நாயகன் இன்ஸ்பெக்டரையும் மருத்துவரையும் பழி வாங்கிவிட்டு அவர்கள் அந்த மூவரும் யார் எனக் கண்டுபிடித்து பழிவாங்க திட்டமிடுகிறார் . 

கொலைப் படலம் துவங்க  , கொலைகாரனைக் கைது செய்யத் தீவிரமாக இயங்குகிறார் ஒரு பெண் போலீஸ் அதிகாரி (நாடோடிகள் அபிநயா) . 

நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .

கமல் நடிப்பில் பாரதிராஜா இயக்கிய ஒரு கைதியின் டைரி படத்தை மலிவுப் பதிப்பாக மீண்டும் எடுத்தால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறது படம். 

ஆதிக் பாபு இயல்பாக நடிக்கிறார். அர்ச்சனா சிறப்பாக நடித்துள்ளார். எம் எஸ் பாஸ்கர் வழக்கம் போல். 

மிரட்டல் செல்வாவின் சண்டைக் காட்சிகள் அபாரம். பகாசுரன் படத்திலும் கலக்கி இருந்தார் அவர் . 

யூகிக்க முடிந்த திரைக்கதை மற்றும் காட்சிகளில் நாயகனுக்கும் டாக்டர் மனைவிக்குமான நட்பு தொடர்பான ஏரியா அருமை . 

அதுபோல  ராம்ஸ் தன் உதவியாளனை அடிக்கடி கோபமாக அறைய அது நகைச்சுவையாக வெளிப்படுவது சிரிக்க வைக்கிறது . 

மற்றபடி பாராட்டவும் பெரிதாக ஒன்றும் இல்லை. குறை சொல்லவும் வேறு ஏதும் இல்லை . 

“ஒரு குற்றவாளிக்கு கொடுக்கிற அதிக பட்ச தண்டனை என்ன தெரியுமா? அவன் திருந்தி  என்னை விட்டுடுங்கன்னு கதறும் போது மன்னிக்காம பழி வாங்கறதுதான் ” என்று படத்தில் ஒரு வசனம் . 

“திருந்தின அப்புறம் கொல்றது ஹீரோயிசம் இல்லை . எனவே இந்த வசனத்தை மாற்றி  ‘ஒரு குற்றவாளிக்கு கொடுக்கிற அதிக பட்ச தண்டனை என்ன தெரியுமா? அவன் இனி தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்ச நிலையில் பயந்து   என்னை விட்டுடுங்கன்னு கதறும் போது நல்லா கதறவிட்டு அப்புறமா போட்டுத் தள்ளுறதுதான் ‘ என்று இருப்பதுதானே நியாயம்?”  என்றேன் , இயக்குனரிடம் . 

அவர் ஒத்துக் கொள்ளவில்லை . திருந்தின அப்புறமும் கொல்வதுதான் பெரிய தண்டனை என்றார் . 

”இல்லீங்க அது பெரிய தண்டனை இல்லை. உண்மையில் கேவலமான தண்டனை. சில சமயங்களில் அநியாயமான தண்டனைன்னு கூட பார்க்கப்படும் ” என்றேன்

”இல்ல சார் திருந்தின அப்புறமும் கொல்வதுதான் பெரிய தண்டனை”  என்றார் .  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *