எந்திரன் -2 படத்தின் பெயர் 2.0 அல்ல .
பின்னே ?
பெயர் 2.ஓ வாம் . (முன்னாடி H வருமா ஷங்கர் சார் ? )
அக்ஷய் குமார் , எமி ஜாக்சன் , ஆகியோர் உடன் நடிக்கும் இந்தப் படத்துக்காக ரஜினிகாந்த், எமி ஜாக்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன .
2.0 படத்திற்காக பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான ஜுராஸிக் பார்க், ஐயர்ன் மேன் உள்ளிட்ட படங்களுக்கு பணிபுரிந்த லீகசி எபக்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு படப் பிடிப்பில் கலந்து கொண்டனர்.
கத்தி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம், ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து, இந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க, ஜெகன் இயக்கத்தில் “ இக்கா “ என்ற படத்தையும் தயாரிக்கிறது. (இதைக் கொடுத்து எந்திரன் 2 வுக்கு அக்ஷய்யை கொண்டு வந்திருக்கிறார்கள் )
தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க ராம் சரண் தேஜ் இயக்கத்தில் கத்தி படத்தின் ரீமேக்கையும் தயாரிக்க உள்ளது.
இதோடு ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க சாம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு சிறிய பட்ஜெட் படத்தையும் தயாரிக்கிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தையும்
லைக்கா நிறுவனம் தயாரிக்க போவதாக ஒரு செய்தி வருகிறது.
விசாரிக்கலாம் என்று பார்த்தால் யாரும் வாயைத் திறந்து பேசலையே !