பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹாரர், கிரைம், திரில்லர் ‘ அரணம்’

மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே  உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட, 
 
500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் ‘அரணம் ‘ என்ற ஹாரர், கிரைம்,  திரில்லர்  இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார். 
 
கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங்களின் கதாநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
 
இசை – சாஜன் மாதவ்
படத்தொகுப்பு – PK 
பாடல்கள் –  பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா 
கலை –  பழனிவேல்
 
ஸ்டண்ட் – Rugger ராம்குமார்
நடனம்  –  ராம்சிவா, ஸ்ரீசெல்வி
மக்கள் தொடர்பு  – மணவை புவன்
தயாரிப்பு – தமிழ்த்திரைக்கூடம் 
 
தனது பிறந்த நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் பற்றிப் பேசிய பிரியன், “
 
வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள்,  அதை எதிர்கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது. 
 
ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்து விட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புது மனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான்.
 
மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பது,   ஹாரர், கிரைம்,  திரில்லர் வடிவில்  சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது..
 
படத்தின் முதல்பாதி முழுக்க ஒரு திசையிலும், இரண்டாம் பாதி முழுக்க twists and turns ஆகவும் பயணித்து, அதன் மூலம் இதுவரை கண்டிரா -ஒரு, பொது  வழக்கமுடைத்த – பிரத்தியேக திரைக்கதை அனுபவத்தை அரணம் நிச்சயமாக வழங்கும்.
 
திரைப்படப் பாடலாசிரியராக இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு நடிகனாக, இயக்குநராக உங்கள் முன் வந்திருக்கிறேன். பாடல்களுக்கு கொடுத்த அதே அன்பையும், ஆதரவையும் இப்பொழுதும் எப்பொழுதும் தர வேண்டுகிறேன். நல்லன நடக்கும். நன்றி.  “என்றார். 
 
வாழ்த்துகள். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *