மாமனிதன் @ விமர்சனம்

ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் சார்பில்  யுவன் சங்கர் ராஜா தயாரிக்க ஸ்டுடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட,  விஜய சேதுபதி, குரு சோம சுந்தரம், காயத்ரி ,  தமிழ் கவுதமன், பேபி மானஸ்வி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கி இருக்கும் படம். 

 
மூன்றாம் வப்பு வரை மட்டுமே படித்த – பண்ணைப்புரத்தின் முதல் ஆட்டோ டிரைவரான நேர்மை மிகு இளைஞன் ( விஜய் சேதுபதி), தனது ஆட்டோவில் மகள் கல்யாணத்துக்கு நகை வாங்கி வந்த பெரியவர்  விட்டு விட்டுப் போன நகையைக் கொடுக்க நினைத்து அவரைத் தேடித் போய்க் கொடுக்க, நகையைத் தொலைத்தவரின் மகள் (காயத்ரி) மேல் காதல் வந்து , இஸ்லாமிய நண்பர் ஒருவரின் ( குரு சோம சுந்தரம்) உதவியால் அந்தக் காதல் கல்யாணத்தில் முடிகிறது . 
 
ஒரு மகன் ( தமிழ் கவுதமன் ) ஒரு மகள் ( மானஸ்வி) என்று போகும் வாழ்க்கையில் தகப்பனுக்கு ஓர் ஆசை. தனது ஆட்டோவில் பயணிக்கும் பிள்ளைகள் எல்லாம் கான்வென்ட் பள்ளிக்குப் போக, கடைசியில் தமது மது பிள்ளைகளை மட்டும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டி இருக்கிறதேஎன்று எண்ணி, தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டி பணம் சம்பாதிக்க முடிவு செய்து, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார் . 
மலையாளி ஒருவர் (ஷாஜி கைலாஷ்) போட்டு இருக்கும் ரியல் எஸ்டேட் மனைகளை விற்றுக் கொடுத்து லாபம் சம்பாதிக்க எண்ணி, தனது நல்ல பெயரை வைத்து மனைகளை வாங்க எல்லோரிடமும் அட்வான்ஸ் வாங்குகிறார். 
 
பத்திரப்பதிவு நடக்கும் நாளில் அந்த மலையாளி மொத்த நிலத்தையும் வேறு ஒருவருக்கு விற்று விற்று கம்பி நீட்டி விட்டது தெரிய வர, ஆட்டோ டிரைவரை நம்பி பணம் கொடுத்த மக்கள் துரத்த , 
 
மனைவி தைரியமாக இருப்பதை உணர்ந்து மனைவி பிள்ளைகளை விட்டு விட்டு ஓடிப் போகிறார் ஆட்டோ டிரைவர். 
 
இஸ்லாமிய நண்பரின் உதவியோடு மனைவியும் பிள்ளைகளும் ஊரைச் சமாளிக்க, தன்னை ஏமாற்றிய மலையாளியைத் தேடி ஆட்டோ டிரைவர் கேரளாவுக்குப் போக , 
 
நடந்தது என்ன என்பதே படம். 
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்  என்ற குரலுக்கு விளக்கமாக வந்துள்ளது படம். 
 
எளிய காட்சிகளால் துவங்கும் படம் மெல்ல மெல்ல இடைவேளை வரை வாழ்வியலாக மாறுவது அழகு. 
 
ஆட்டோ டிரைவருக்கும் மகளுக்குமான உரையாடல்கள் அழகு. 
 
இடைவேளைக்குப் பிறகு நல்ல விசயங்களை சொன்னாலும் யதார்த்த மீறிய சம்பவங்களால் படம் விலகிப் போகிறது . 
 
அதே நேரம் தனது இந்து நண்பருக்காக ஓர் இஸ்லாமியர் காசியில் கங்கை நதிக்கரையில் தொழுகைப் பிரார்த்தனை நடத்துவது போன்ற அற்புதமான காட்சிகளும் உண்டு .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *