
ஒரு நடிகர் அல்லது நடிகையை அறிமுகம் செய்வது வேறு , உருவாக்குவது என்பது வேறு.. அந்த வகையில் இயக்குனர் பாலா நடிகர்களை உருவாக்குவதில் வல்லவர்
சீயான் விக்ரம் , சூர்யா, அதரவா, ஆர்யா, விஷால் என்று நீளும் இந்த உருவாக்கபப் பட்டியலில் தற்போது ‘தாரை தம்பட்டை’ படத்தில் வில்லனாக பாலாவால் அறிமுகப்படுத்தலாம் உருவாகளும் ஒன்றாக நடந்து ,
மருது ‘ படத்தில் வில்லனாக வந்து கலக்கி இருக்கும் ஆர் கே சுரேஷும் இணைகிறார்.
குறைந்தக் காலக் கட்டத்தில் சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்று தனது நிறுவனமான ஸ்டுடியோ 9 நிறுவனத்துக்கு பெயர் ஈட்டித் தந்த சுரேஷ்,
நடிப்பின் மேல் உள்ள தனது காதலால் , இன்று எல்லோரும் மெச்சும் ஒரு நல்ல வில்லனாக உருவெடுத்து இருக்கிறார்.
சமீப காலமாக நமது நேட்டிவிட்டிக்கு பொருந்தாத வட இந்திய வில்லன்களைப் பார்த்து சலித்துப் போன தமிழ் ரசிகர்கள் ,
ஆக்ரோஷமான நடிப்பை வெளிப் படுத்தியிருக்கும் தனக்குக் கொடுக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்து போய் இருக்கிறார் சுரேஷ்.
‘எனக்கு கிடைத்து இருக்கும் இந்த வரவேற்பு எனக்கு உற்சாகம் தந்த அளவுக்கு பொறுப்பும் கொடுத்து இருக்கிறது என்றுதான் சொல்லுவேன். இந்த அந்தஸ்து எனக்கு ஒரு நாளில் வந்துவிடவில்லை.
கடினமான உழைப்பும் , தீராத நடிப்பு பசியும்தான் எனது இந்த நிலைக்குக் காரணம் என்பேன்.
நான் ஒரு இயக்குனரின் நடிகனாக தான் இருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு வாழ்நாள் முழுக்கக் கடமைப் பட்டு இருக்கிறேன் ‘ என்கிறார் ஆர் கே சுரேஷ்.