ஒயிட் ஸ்கிரீன் மீடியா சார்பில் அந்தோணி எட்வர்ட் என்பவர் தயாரிக்க, நடிகை மோனிகா கதாநாயகியாக நடிக்க, பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க,
வசந்த பாலனின் உதவியாளர் மகேஸ்வரனின் கதை திரைக்கதை வசனத்தில் கேசவன் என்பவர் இயக்கயுள்ள படம் மீரா ஜாக்கிரதை .
ரசிகர்கள் ? பார்ப்போம் !
காயாறு என்ற ஆற்றின் மேல் நெடுஞ்சாலைக்காக கட்டப்பட்ட ஒரு பாலம் ஒரு அமானுஷ்ய சக்தி உலவும் இடமாக இருக்கிறது . இரவில் அந்த வழியாக பயணம் செய்யும் பலர்,
ஒரு பெண் பேயால் கொல்லப் படுகிறார்கள் .
ஊர் மக்களே ஒதுங்கி நிற்க , சென்னையில் இருந்து மாணவர் குழு , அந்த இடம் பற்றி ஆராய்ந்து டாக்குமெண்டரி படம் எடுக்க அங்கே போகிறது .
யார் அந்த பெண் பேய்? அது எப்படி செத்தது ? ஆராயப் போன மாணவர்களுக்கு என்ன நடந்தது ? என்பதே இந்த படம் .
வயசான முறை மாமனுக்குப் பயந்து காதலனைத் திருமணம் செய்ய அம்மாவின் ஆசியோடு கிளம்பிப் போய் , போன இடததில் சிலரால் கற்பழித்து உயிரை விடும் மீரா பெண்ணாக மோனிகா .
மீராவை கற்பழித்துக் கொல்லும் வில்லனாக பாபி சிம்ஹா .
ஆரம்ப கால பாபி சிம்ஹாவை வேறு ஒருவரின் குரலில் இப்போது பார்க்க முடிகிறது .
படு இரைச்சலான கொடுமையான பின்னணி இசை .
தனது காதலனின் உருவத் தோற்றத்தில் உள்ள நபரைப் பார்த்து மீரா பேய் நெகிழும் காட்சி சற்றே கனம்.
மற்றபடி எல்லா வகையிலும் இன்னும் ஆழமும் அழுத்தமும் நேர்த்தியும் தேவைப் படும் படம் இது