நிகழ்ச்சியில் பேசிய நடிகை துளசி ” நான் நடித்த போது கூட தெரியாது. தியேட்டரில் பார்த்த போது மிக சிறப்பாக இருந்தது .
நகை பறிப்புக் குற்றத்தை பற்றிய இந்தப் படம் முடிந்ததும் படத்துக்கு வந்திருந்த பெண்கள் தங்களுக்குள் ‘கழுத்து செயினை பாத்துக்குங்க’ என்று பேசிக் கொண்டார்கள் . அதுதான் படத்தின் வெற்றி ” என்றார்
படத் தொகுப்பாளர் ரமேஷ் பாரதி ” இந்தப் படத்தை மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் உருவாக்கினார் . படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது .
படம் பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்கள் பலர், இந்தப் படத்துக்கு எதுக்கு ஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்று அதிர்ச்சியோடு கேட்டார்கள் . அதற்கு ஏற்ப இது நல்ல படம் என்பதை உணர்ந்து,
வெளியூர்களில் மக்கள் எல்லாம் குடும்பத்தோடு படத்துக்கு போகிறார்கள் ” என்றார் ..
“பின்னணி இசையை எல்லோரும் பாராட்டுவது மகிழ்வாக இருக்கிறது ” என்றார் இசையமைப்பாளர் ஜோகன்
சண்டை இயக்குனர் மகேஷ் தனது பேச்சில் ” குழந்தையின் கழுத்தில் இருந்து செயினை பறிக்கும் காட்சி எடுக்கப்பட்ட விதத்தில் எந்த கிராபிக்ஸ் உத்தியும் இல்லை .குழந்தைக்கு சிறு கீறல் கூட இல்லை .
ஆனால் அந்தக் காட்சி எடுக்கப்பட்ட விதத்பதில்ல அதிர்ந்ததாக பலரும் பாராட்டி எழுதியதைப் பார்த்த போது பெருமையாக இருந்தது .
வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இணையாக நாமும் எடுக்க முடியும் என்பதற்கு உதாரணம் அது .
இந்தப் படத்துக்கு A சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது . ஆனால் இது ADULTS ONLY அல்ல . AWARENESS ONLY .அதாவது விழிப்புணர்ச்சி தரும் படம் ” என்றார் .
நடிகர் சென்ட்ராயன் பேசும்போது ” நானும் ஹீரோ சிரிஷும் பல ஊர்களுக்கும் போனோம் .
மக்கள் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள் .
இதுவரை வில்லனா ஆக்டிங் பண்ணிட்டு இருந்தேன் .இந்தப் படத்தில் பாசிடிவ் கேரக்டர் கொடுத்து என்னை மாற்றிய இயக்குனருக்கு நன்றி ” என்றார்
நாயகன் சிரிஷ் பேசும்போது “பல ஊர்களுக்கும் நானும் சென்ட்ராயனும் போனோம் .
சென்னையில் மட்டும் ஏ சான்றிதழால் வசூல் பாதிக்கப்பட்டு இருக்கு .
மற்ற ஊர்களில் நல்லா போகுது . எனக்கு இப்படி ஒரு நல்ல படம் கொடுத்த இயக்குனருக்கு நன்றி ” என்றார்
“இப்படி ஒரு நல்ல படத்தில் இருப்பது மகிழ்ச்சியான விஷயம் ” என்றார் நாயகி மாயா .
“ஹீரோவாகத்தான் நடிக்கணும் என்று எண்ணி சும்மாவே உட்கார்ந்து இருந்த என்னை வில்லனாக்கி புதிய உலகை காட்டி இருக்கும் இயக்குனரை மறக்க மாட்டேன் ” என்றார் சத்யா .
வாழ்த்திப் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன் ” குழந்தை கழுத்தில் செயின் பறிக்கும் காட்சியில் சிறு அடியாவது பட்டு இருக்கும் என்று நினைத்தேன் . ஆனால் சிறு சிக்கல் கூட இல்லை என்பது பாராட்டுக்குரியது .
ஆனந்த கிருஷ்ணன் மிக சிறப்பாக படத்தைக் கொடுத்து இருந்தார் . ஏ சர்டிபிகேட் என்பது சென்னையில் மட்டும்தான் பாதிக்கும் . மற்றபடி படம் பெரிதாக வெற்றி பெறும்” என்றார்
நன்றி கூறிப் பேசிய இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் “படம் பார்த்து விட்டு விஜய் ஆன்டனி சார், தனஞ்செயன் சார் உட்பட பலர் போன் செய்து பாராட்டினார்கள் . மீடியா எனக்கு கொடுத்த ஆதரவு மறக்க முடியாத ஒன்று .
இந்த படததில் நான் செய்த சில தவறுகளை சுட்டிக்காட்டி இருந்தீர்கள் . அடுத்து வரும் படங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு நல்ல படங்களைத் தருவேன் ” என்றார் ,
வாழ்த்துகள் சகோதரா !