மார்ச் 9 ம் தேதி முதல் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

motta 1

சக்கர வியூகம் பத்ம வியூகம் இவற்றை எல்லாம் அப்பாற்பட்டு விதம் விதமாக வந்த பல்வேறு தடைகளையும் மீறி வரும் ஒன்பதாம் தேதி திரைக்கு வருகிறது மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படம்

இந்த சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்து படக் குழு .

நடந்த பிரச்னைகளை எல்லாம் சுருக்கமாக எடுத்து உரைத்த அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ” ஒரு நிலையில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில் இருந்தோம் .

கோர்ட் நடைமுறை என்னும் கடலில் கரைந்தோம் . இப்போது படத்தின் தடை விதிக்கப்பட்டு நல்ல தீர்ப்பு வந்துள்ளது .

வரும் ஒன்பதாம் தேதி படம் வெளிவருகிறது .

motta 2

இந்தப் பிரச்னை முடிய லாரன்ஸ் மாஸ்டர் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . அவரது முழு சம்பளத்தையும் விட்டுக் கொடுத்தார் . அதற்கு மேலும் கொடுத்தார் .

இந்த நேரத்தில் இந்தப் படத்துக்கு பிரச்னை செய்தவர்களுக்கு ஒரே வார்த்தை . சினிமா தொழிலை விட்டு விடுங்கள் . எங்களுக்கு கெடுதல் செய்த உங்களுக்கு கூட இனி நல்லதே நடக்கட்டும் ” என்றார் .

விநியோகஸ்தர் கூட்டமைப்பின் தலைவர் செலவின் ராஜு “பிரச்னை சுமூகமாக முடிந்து விட்டது .

motta 5

லாரன்ஸ் உட்பட பலரும் இதற்காக்  பணத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் . படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் .

படத்தை வாங்கி வெளியிடும் டாக்டர் சிவ பாலன் “பிரச்னை முடிவதற்குள் நிறைய சிரமங்களை அனுபவித்தோம் . எல்லாம் மீறி நல்ல படியாக முடிந்துள்ளது . படம் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் ” என்றார் .

அருள்பதி பேசும்போது ” லாரன்ஸ் கொடுத்த ஒத்துழைப்பு  பாராட்டுக்குரியது . படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் என் நண்பர் வெளியிடுகிறார் .

motta 22

படம் பார்த்த நான் படம் பிடித்துப் போய் என்னையும் அவர்களுடன் இணைத்துக் கொண்டுள்ளேன் . காரணம் படம் அவ்வளவு சிறப்பாக உள்ளது ” என்றார்

படத்தின் இசையமைப்பாளரான அம்ரேஷ் தன் பேச்சில் ” இந்தப் படத்துக்கு பிரசனை என்பது எங்கள் எல்லோரையும் வெகுவாகப் பாதித்தது .

பாடல்கள் எல்லாம் ஹிட் ஆன நிலையில் படத்தின் நிலை எங்களை அப்செட் ஆக்கியது. இப்போது படம் வருவது ரொம்ப சந்தோசம்” என்றார்

motta 3

இயக்குனர் சாய் ரமணி பேசும்போது ” இந்த வாரம் மட்டும் படம் வெளியாகிறது போயிருந்தால் இரண்டாயிரம் பேரோடு வள்ளுவர் கோட்டம் அருகே சாலை மறியலில் இறங்கி இருப்பேன் .

இப்போது தடை நீங்கிய பிறகுதான் நிம்மதி வருகிறது ” என்றார் .

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி பேசும்போது ” இது எனக்கு 88 ஆவது படம் . இதுவரை நான் எந்த பைனான்சியரிடமும் போய் கடன் கேட்டு நின்றது இல்லை .

motta 6

இந்தப் படத்துக்கும் நான் போய் நிற்காத போதும் ,அப்படி ஒரு நிலை படத்துக்கு ஏற்பட்டு விட்டது . இது எனக்கு பெரிய பாடம் . எல்லாவற்றையும் மீறி படம் வருவதில் மகிழ்ச்சி ” என்றார்

நிறைவாக லாரன்ஸ் பேசும்போது ” இந்தப் படம் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த படம் . இது தாமதம் ஆனபோது அவர் ரொம்பவே வருத்தப்பட்டார் . இப்போது தடை நீங்கியதில் மகிழ்ச்சி

இந்தப் படம் துவங்கியபோது ஆனந்த விகடன் நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து பலருக்கும் உதவி செய்தேன் .

motta 7

தர்மம் காக்கும் என்பார்கள். அந்த தர்மம்தான் இன்று படத்தைக் காத்து விட்டது .

சிவலிங்கா படத்துக்காக இப்படி நான் எதுவும் அப்படி செய்யவில்லை .

எனவே சிவலிங்கா படத்தின் சார்பில் வறுமையால் வாடும் விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்குகிறேன் ” என்று சொன்னவர் , மறுநாளே அதை செய்தும் முடித்தார் .

ஆக, இனி  தடையில்லை என்ற நிலையில் வரும் ஒன்பதாம் தேதி திரைக்கு வருகிறது மொட்ட சிவா கெட்ட சிவா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *