வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிரபு, இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் பாடல் 07-09-2022 அன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
