சின்னத்திரை சினிமா ‘நந்தினி’

nandni 333
வெள்ளித் திரைக்கு ஒரு பாகுபலி போல் சின்ன திரைக்கு  நந்தினி என்று அழைக்கப்படும் ந்தினி மெகாத்தொடர் சன் தொலைக்காட்சியில் நூறாவது எபிசோடைகடந்து விட்டது
 
டைரக்டர் சுந்தர்.சியின்  அவனி சினி மேக்ஸ் பிரைவட் லிமிடெட் தயாரிக்க,
 
 சுந்தர்.சியின் கதைக்கு வெங்கட் ராகவன் திரைக்கதை அமைத்து  பத்ரி கே.என் நடராஜன் வசனம் எழுத,  யு.கே  செந்தில் குமார் ஒளிபதிப்பில்  இயக்குனர் ராஜ்கபூர் இயக்குகிறார்
 
nandni 222
ஆவிக்கும் பாம்புக்கும்  போட்டி என்றால் விறுவிறுப்பாக இருக்கும். அதனை சுவாரசியமான  கதை களத்தில் கொண்டு செல்கிறது நந்தினி என்கிறார்கள்
 
 மலேசியா ,மைசூர், கல்லிடைக்குறிச்சி, பொள்ளாச்சி ,ரிஷிகேஷ்  போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது
 
நந்தினி தொடரின் இயக்குநர் ராஜ் கபூர் நந்தினி தொடரை பற்றி சொல்லும்போது “நந்தினி தொடர் கன்னடம், தெலுங்கு. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது .
nandni 6
கிளாமர் அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் இருக்கிறது. இளைஞர்களிடம் நந்தினி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குஷ்பூ இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அது மட்டும் அல்லாமல் மற்றுமொரு பிரபலமும் இத்தொடரின் முக்கிய பகுதி ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்” என்றார்.
 
 கதாநாயகி நித்யாராம் ” முதலில் தமிழ் மற்றும் கன்னடத்தில்  ஒரே நேரத்தில் நடிக்கும்போது  தயக்கமாக இருந்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது.
nandni 33
ஆனால் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜமான மனநிலை இப்போது வந்துவிட்டது.  
 எனது தாய்மொழி கன்னடம். தற்போது தமிழ் எனக்கு நன்கு பழகிவிட்டது. தற்போது எனக்கு என்னுடைய தாய் மொழியை விட தமிழில் நடிப்பது எளிதாக உள்ளது .
எனது உடை மற்றும் சிகை அலங்காரம்  அனைத்தையும் குஷ்புதான் தேர்வு செய்வார்கள். .என்னிடம் பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு, 
நந்தினி தொடரை பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள் . அது மிகவும் மகிழ்ச்சியாக  உள்ளது.” என்றார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *