மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளிவந்து ரூ.150 கோடி வரை வசூல் செய்த படம்,
டோமிச்சன் முலக்குப்பாடம் என்பவர் தயாரிப்பில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா ஆகியோர் நடிக்க , வைஷாக் என்பவர் இயக்கிய புலி முருகன்’
இப்படத்தின் சண்டைக் காட்சிக்காக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் கெய்னுக்கு இந்த ஆண்டுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
படத்தின் பல காட்சிகள் தாய்லாந்திலும் வியட்நாமிலும் நிஜமான புலிகளை வைத்து உருவாக்கப்பட்டது (கூடவே கிராபிக்ஸ் புலியும் உண்டு)
ஒரு மிருகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்துவது என்பது சிரமமான காரியம். ஆனால் புலியை வைத்து பல ரிஸ்க்கான காட்சிகளை இந்த படத்திற்கு எடுத்தது மிகப்பெரிய சிரமம்.
காரணம் எப்போது கோபம் வரும் என்ன செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி நிறைய விஷயங்கள் இந்த படத்தில் நடந்தது.
இதில் நடித்த நடிகர்கள் வேலை செய்த தொழில்நுட் கலைஞர்கள் அனைவரும் மிகவும் சிரமமப் பட்டனர்.
தவிர , மலையாளத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை இந்தப் படம் ஏற்படுத்த முக்கியக் காரணம்,
படம் பார்த்தே ரொம்ப நாள் ஆன வயதில் மூத்த மலையாளிகள் கூட இந்தப் படத்தை விரும்பிப் பார்த்ததுதான் .
அவர்கள் விரும்பிப் பார்க்கக் காரணம் முருகன் என்ற பெயர் . காரணம் ஓரிரு தலை முறைகளுக்கு முந்தைய மலையாளிகள் பலரின் இஷ்ட தெய்வமே பழனி முருகன்தான்.
இப்போது இந்தப் படம் தமிழுக்கு என அதே புலி முருகன் என்ற பெயரில் (பின்னே பேரை மாற்றவா முடியும் ? முருகன் கூட புலி வேறு இருக்கு) 3டி படமாக உருவாக்கப்படுகிறது
மலையாளத்தில் தயாரித்த முலக்குபாடம் பிலிம்ஸ் நிறுவனமே தமிழிலும் உருவாக்குகிறது.(இதைத் தொடர்ந்து மலையாளத்திலும் 3டியில் உருவாக்கப்படுகிறது)
ஆக்சன் மற்றும் அட்வெஞ்சர் படமான இதை , ஆர்.பி.பாலா என்பவர் தமிழில் வசனம் எழுதி தமிழாக்கம் செய்துள்ளார்.
படத்தின் டிரைலரும் சில காட்சிகளையும் பார்த்தபோது மிக சிறப்பான படமாக்கல் இருப்பது தெரிந்தது . தெலுங்கு ஜெகபதி பாபு கூட இருக்கும் இந்தப் படத்தில் தமிழ் நடிகர் யாரும் எல்லை என்பது ஒரு குறை
சமீபத்தில் மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை 3டி தொழில்நுட்பத்தில் சிறப்பு காட்சியாக திரையிட்டனர். ஒரே காட்சியில் 25,000 பேர் பார்த்து அது ‘கின்னஸ்’ சாதனையாக பதிவிடப்பட்டது.
இப்படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் என்ற நிறுவனம் வெளியிடவுள்ளது.