கடந்த வாரம் ரிலீசான ‘தரமணி கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும், வரவேற்பு பெற்றதாக மகிழ்ந்து பொது மக்களுக்கும்ப த்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தது படக் குழு .
தயாரிப்பாளர் சதீஷ் குமார் “தரமணி எங்கள் நிறுவனத்துக்கு பெரும் மதிப்பை தந்த படமாக வந்துள்ளது . இயக்குனர் ராம் எனக்கு கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது
மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தரமான படங்களை பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ,
பாராட்டும் வழக்கம் கொண்ட ரஜினி சார் , தரமணி படத்தை பார்த்து விட்டு என்னை போனில் அழைத்து பாராட்டினார்.
இது போன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. மகிழ்ச்சியான ஆச்சிரியத்தில் உறைந்தே போனேன்.
‘தரமணி’ ஒரு துணிச்சலான படம் (Bold film)’ என்று அவர் கூறினார். படத்தின் எல்லா அம்சங்களை பற்றியும் விவரமாக பாராட்டினார். படத்தின் வணிக வெற்றியை பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
படத்தின் பெரிய வெற்றியை அவரிடம் கூறியபொழுது கேட்டு மகிழ்ந்தார். ‘தரமணி’ மூலம் நடிப்பில் காலடி எடுத்துவைத்திருக்கும் எனது நடிப்பையும் எனது கதாபாத்திரத்தையும் பற்றியும் பேசி பாராட்டினார்.
இது போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகள் மேலும் தரமான படங்களை தயாரிக்க எனக்கும் எனது நிறுவனத்துக்கும் பெரும் ஊக்கமாக உள்ளது” ” என்றார் .
நாயகன் வசந்த் ரவி பேசும்போது
” புதுமுகமான என்னை வைத்து இவ்வளவு பெரிய படத்தைக் கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நன்றி . உடன் நடித்த அனைவரும் நடிப்பில் சீனியர்கள் .
ஆனாலும் என்னை கண்வீனியன்ட் ஆக வைத்துக் கொண்டனர் . பின்னணி பேசியதில் எனக்கு பேருதவியாக இருந்த உதவி இயக்குனர்களுக்கு நன்றிகள் ” என்றார்
ஆண்ட்ரியா தன் பேச்சில் ” இப்படி ஒரு படம் எனக்கு இனி கிடைக்குமா என்று தெரியவில்லை . என் வாழ்வில் இது முக்கியமான படம் .
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படி ஒரு படத்தைக் கொடுத்த சதீஷ்குமாருக்கும் ராமுக்கும் நன்றி ” என்றார் .
இயக்குனர் ராம் தன் பேச்சில் ” இன்னும் சில ஆண்டுகளில் ஆண்ட்ரியா மிகப் பெரிய நடிகையாக வருவதற்கான அம்சங்களை இந்தப் படம் தந்துள்ளது . படத்துக்கான அவரது ஆர்வம் , அக்கறை எல்லாம் மிகப் பெரியது .
இந்தப் படத்தை நாங்கள் மூன்றரை வருடம் சுமந்தோம் . இடையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த இறைவி உள்ளிட்ட படங்கள் வரும் போது எல்லாம் இந்தக் கதை தொடப்பட்டு விடுமோ என்று எண்ணுவோம் .
அதே நேரம் தாமதம் காரணமாக வந்த மாற்றங்களை எல்லாம் ஏற்று படத்தில் வைத்தோம் . உதாரணமாக இந்தப் படம் துவங்கியபோது வாட்ஸ் அப் என்பதே இல்லை .
ஆனால் படத்தில் வாட்ஸ் அப் பற்றியும் பேசி இருக்கிறோம் . அப்படியே டீ மானிடைசெஷனை பற்றியும் படத்தில் பேசினோம் .
மத்திய அரசை தாக்கியது மாநில அரசை ஏன் தாக்கவில்லை என்கிறார்கள் . மாநிலத்தில் அரசு என்று ஒன்று இருந்தால்தானே தாக்க ?” என்றார் .
அதானே ?