நடிப்புலக இமயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசாக இளைய திலகம் பிரபுவும் அவரது வாரிசாக விக்ரம் பிரபுவும் பிறந்து வந்தது போல,
அவர் வீட்டில் இருந்து சாந்தி பிலிம்ஸ், சிவாஜி புரடக்ஷன்ஸ் , சிவாஜி பிலிம்ஸ் நிறுவனங்களை அடுத்து , அடுத்த வாரிசாக இப்போது ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் உருவாகி உள்ளது .
ஆம் !
ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற என்ற அந்த நிறுவனத்தின் பிறப்பு விழாவும்….
மேற்படி ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் சார்பில் விக்ரம் பிரபு , சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை , சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்..கே. அஜய் குமார் ஆகியோர் தயாரிக்க,
விக்ரம் பிரபு , நிக்கி கல்ராணி , பொன் வண்ணன், நான் கடவுள் ராஜெந்திரன் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்க,
பி.அசோக் குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் நெருப்புடா என்ற படத்தின் துவக்க விழாவும் ,
கலைத்தாயின் மூத்தமகன் வாழ்ந்த அந்த அன்னை இல்லத்தில் கோலாகலமாக நடந்தது .
படத்துக்கு ஒளிப்பதிவாளர் – R.D. ராஜசேகர், இசை – ஷான் ரோல்டன், பாடல்கள் – ரோக்கேஷ், கலை – எம்.பிரபாகரன், படத் தொகுப்பு – தியாகு, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் – நரேன், டிஸைனர், சபீர்,
திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியது
(மேலே உள்ள கேலரி புகைப்படங்களில் அதை அறிய முடியும்)
மிகுந்த சந்தொஷத்த்தில் இருந்த பிரபு “அப்பாவின் ஆசிர்வாதத்தோடு தொடங்கும் இந்த நிறுவனத்துக்கு — படத்துக்கு,
அனைவரும் திரண்டு வந்து வாழ்த்துவது சந்தோஷமாக இருக்கிறது ” என்றார், நெகிழ்வும் மகிழ்வுமாக ,.
படத்தைப் பற்றி கூறிய விக்ரம் பிரபு
” தயாரிப்பாளராகவும் ஆகி இருப்பதில் பொறுப்பு கூடி இருக்கிறது .இந்தப் படத்தில் நான் தீயணைப்பு வீரராகவும் தீவிர ரஜினி ரசிகராகவும் நடிக்கிறேன் .
படத்துக்கு நெருப்பு என்று ஒரு டைட்டிலை யோசித்து வைத்து இருந்தோம் . இந்த சமயத்தில் ரஜினி சாரின் கபாலி படத்தின் பாடலில் வரும் ‘நெருப்பு டா’ என்ற வார்த்தை பிரபலமாகி விட,
அதையே பெயராக வைத்து விட்டோம் ” என்கிறார் .
படத்தின் இயக்குனர் அசோக்குமார் .ரோமியோ ஜூலியட் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் . ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் இரண்டு படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர் .
அது மட்டுமா ?
சி என் என், ஐ பி என் தொலைக்காட்சி நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பத்திரிக்கையாளராகப் பணி புரிந்தவர் .
பல்துறை அனுபவம் கொண்ட அசோக்குமார் என்ன சொல்கிறார் ?
அறிமுக இயக்குனர் அசோக் குமார்
“எல்லாமே ஒரு அதிசயம் போல இருக்கிறது .
சின்ன வயசு முதல் நான் சிவாஜி சாரின் தீவிர ரசிகன் . அவாது தமிழ் வசனங்களை பேசி பள்ளிக் கூடத்தில் கைதட்டலும் பரிசுகளும் வாங்கியவன்.
(வீர பாண்டியக் கட்ட பொம்மன் படத்தில் வந்த பெரிய வசனங்களை மட்டுமல்ல , சிறு சிறு வசனங்களையும் பிசிறு தட்டாமல் அவர் பேசுவதைப் பார்க்கும்போது, ஒலிசித்திரம் கேட்பது போல இருக்கிறது)
இன்று அவர் பேரன் தயாரித்து நடிக்கும் படத்தை இயக்குவது என்பது எனக்கு ஒரு சிலிர்ப்பான உணர்வாக இருக்கிறது .
இதுவரை தமிழில் ஓரிரு படங்களில் தீயணைப்பு வீரர் பற்றிய கதை வந்து இருக்கிறது . ஆனால் அவை எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியாக இந்த நெருப்புடா படம் இருக்கும் .
நடிகர்த திலகத்தின் தங்கப் பதக்கம் எப்படி போலீசுக்கு பெருமை சேர்த்ததோ ., அது போல இந்தப் படம் தீயணைப்பு வீரர்களுக்குப் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் .
அந்த தீயணைப்பு வீரர் என்ற கேரக்டருக்குள் ரஜினி ரசிகர் என்ற குணாம்சத்தை எல்லோரும் ரசிக்கும் வகையில் கலந்து இருக்கிறேன் ” என்கீறார் அசோக் குமார் .
தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள் சங்கத் தலைவர் டைமண்ட் பாபு , இந்தப் படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462