அருமையான பாடல்களோடு இயக்குனர் ,இசைஞர் பரணியின் ‘ஒண்டிக்கட்ட’

ondi 1
மீண்டும் அட்டகாசமான பாடல்களோடு களம் இறங்கி இருக்கிறார் இசையமைப்பாளர் பரணி. கூடவே இயக்குனராகவும் !

ஃபிரண்ட்ஸ் சினிமா மீடியா  என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா ஆர்.தர்மராஜ், ஷோபா கே .கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் தயாரிக்க,

தெனாவட்டு, சிங்கம் புலி, வாலு , குரங்கு கையில் பூமாலை , எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் கேரக்டர் ரோலில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் நாயகனாக நடிக்க,

ondi 999

உச்சத்துல சிவா, இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற படங்களின் நாயகியான நேகா கதாநாயகியாக நடிக்க,

உடன் தயாரிப்பாளர் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்றாயன் , மதுமிதா,  ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்க,

இசையமைப்பாளர் பரணி இசை அமைத்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஒண்டிக் கட்ட

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னோட்டமும் நான்கு பாடல்களும் திரையிடப்பட்டன . கிராமத்து நாகரீகம் , காதல், மோதல் , செண்டிமெண்ட் என்று படம் இருக்கும் என முன்னோட்டம் சொன்னது .

ondi 999999
திரையிடப்பட்ட நான்கு பாடல்களும் அடடா ! தேன் குடமாக இனித்தன . அதுவும் ”முன்ன விட்டு” மற்றும் ”கெட்ட கெட்ட கனவா வருது…” பாடல்கள் இனிமையோ இனிமை .
ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு மிக அருமை . குளுமை.

நிகழ்ச்சியில் பல இசையமைப்பாளர்களும் இயக்குனர்களும் கலந்து கொண்டு மனப்பூர்வமாக பரணியை பாராட்டினார்கள் .

இசையமைப்பாளர் தீனா பேசும்போது ” பரணி சிறப்பாக பாடல்களைக் கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை . ஏனென்றால் நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து செய்யும் வேலை அது . ஆனால் டைரக்ஷன் செய்வது கஷ்டம் .

ondi 8
என்ன ஆச்சர்யம் ! அருமையான பாடல்களைக் கொடுத்ததோடு மிக சிறப்பாக அந்தப் பாடல்களை படமாக்கியும் இருக்கிறார் . மனதாரப் பாராட்டுகிறேன் ” என்றார் .

எஸ் ஏ ராஜ்குமார் தன் பேச்சில் ” இப்போது வரும் பல பாடல்கள் சத்தக் குப்பைகளாகவே இருக்கின்றன . நாம் ட்ரெண்ட் என்ற பெயரில் அவைதான் இசை என்று நினைத்துக் கொள்கிறோம் .

ஆனால்  ட்ரெண்ட் என்ற ஒன்று இல்லை என்பதை இந்தப் படத்தின் பாடல்கள் மூலம் நிரூபித்துள்ளார் பரணி .
ondi 3
பார்வை  ஒன்று போதுமே படத்தின் பாடல்களில் அவர் கொடுத்த அதே இனிமை இந்தப் படத்திலும் இருக்கிறது ” என்றார்

இசையமைப்பாளர் சத்யா  பேசும்போது  ” இசை அமைப்பாளர்கள் ஹீரோவாகப் போகும் காலத்தில் பரணி அதற்கும் மேலே ஒரு படி மேலே போய் இயக்குனராகி இருக்கிறார் .

ஆரம்பத்தில் நான் கீ போர்டு பிளேயராக பல இசைக் கச்சேரிகள் செய்து இருக்கிறேன் . அப்போது இளையராஜா ஏ ஆர் ரகுமான் பாடல்களில் கூட ஒரு படத்துக்கு ஒரு பாடல் என்று பாடுவோம் .
ஆனால் இவரது ‘பார்வை ஒன்று போதுமே’ படம் வந்த போது, படத்தில் வந்த ஐந்து பாடல்களையும் ரசிகர்கள் பாடச் சொல்லி, 
ondi 7
நாங்கள் பாடிய அதிசயம் அடிக்கடி நடந்தது . இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் அப்படி பாடப் படும் . அவ்வளவு இனிமையான பாடல்கள் ” என்றார் .

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இசையமைப்பாளர் அம்ரேஷ் தனது பேச்சில் ” உண்மைதான் . நாங்கள் எல்லாம் ட்ரெண்ட் என்ற மாயவலையில் சிக்கிக் கொண்டோம் .

அந்த மாயவலையில் இருந்து மீளும் உணர்வை இந்தப் படத்தின் பாடல்கள் தருகிறது .பரணி சார் .. உங்களைப் போன்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன் .

ondi 6

இசையமைப்பாளர்கள் ஹீரோ ஆவது பற்றி சொன்னார்கள் . நான் தலைகீழ், ஹீரோவாக இருந்து இசையமைப்பாளராக வந்தவன் . எனக்கு நடிப்பை விட இசையே பிடித்து இருக்கிறது ” என்றார் .

இயக்குனர் சக்தி சிதம்பரம் பேசும்போது ” நானும் பிரபுதேவாவும் படம் பண்ண முடிவு செய்த நிலையில், ” ஒரு பயணத்தில் ,

பரணி இசை அமைத்த திரும்பத் திரும்ப பார்த்து பார்த்து ….” பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே போனோம் .
‘இவர் வேணுமே’ என்றார் பிரபுதேவா . பரணியை சந்தித்தோம் . ”சும்மா ஒரு டியூன் போடுங்க பாப்போம் ” என்றேன் .

ondi 9999

சும்மா என்ற வார்த்தையை வைத்தே ‘பொண்ணு ஒருத்தி   சும்மா சும்மா …பையன் ஒருத்தன் சும்மா சும்மா …அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…’ ன்னு, 
உடனே ஒரு ஹிட் டியூன் போட்டார் . அப்படியே படத்தில் வச்சோம் . இந்தப் படத்தின் பாடல்கள் அட்டகாசம் ” என்றார் .

இயக்குனர் பாரதி கணேஷ் பேசுகையில் ” வெளிநாடுகளில் எண்பது வயது ஆனாலும் இயக்குனர்கள் படங்களை எடுக்கிறார்கள் . ஆர் டி பரமன் வயதான பிறகுதான் இளமையான பாட;ல்கள் கொடுத்தார் .

ondi 99999
ஆனா நம்ம ஊரில் ட்ரெண்ட் என்ற பேரில் புதுசா என்ன வந்தாலும் அதுவரை அனுபவம் பெற்ற பல திறமைசாலிகளை ஒதுக்கிடறோம் . அப்படி அநியாயமா ஒதுக்கப்பட்ட திறமைசாலிதான் பரணி

அவரை இயக்குனர்கள் புறக்கணித்ததன் விளைவு ? இப்ப அவர் இயக்குனராவும் ஜெயிக்கப் போறார் ” என்றார் .

இயக்குனர் விஜய் சந்தர் தன் பேச்சில் “இந்தப் படத்தின் நாயகன் விக்ரம் ஜெகதீஷ் என் நெருங்கிய நண்பன் . ஒரே அறையில் நாங்கள் இருந்தோம் . அவன்  கடின உழைப்பாளி . திறமைசாலி.  குறிப்பா மிக நல்லவன்.

ondi 5
வாலு படத்தில் சின்ன கேரக்டர நடிக்க வச்சேன் . இப்போ விக்ரம் சாரை வச்சு நான் இயக்கும் ஸ்கெட்ச் படத்தில் ஒரு வில்லன் வேடத்துக்கு கூப்பிட்டேன் .
அவன் ”இல்லடா .. நான் இப்ப ஒண்டிக்கட்ட படத்துல ஹீரோவா நடிக்கிறேன் . இப்போ விக்ரம் சார் கூட ஒரு பெரிய படத்துல வில்லனா நடிச்சா எனக்கு நல்லது நடக்கலாம் .
ஆனா நான் ஹீரோவா நடிக்கிற படத்துக்கு பாதிப்பு வரும்’னு சொல்லி மறுத்துட்டான் . இந்த அளவுக்கு தன்னோட டைரக்டர் மற்றும் தயாரிப்பாளருக்கு நல்லது நினைக்கிற விக்ரம் ஜெகதீஷ் ஜெயிக்கணும் ” என்றார்

இயக்குனர் சாய் ரமணி பேசும்போது ” எனது சிங்கம் புலி படத்தில் வில்லனாக சிறப்பாக நடித்தவர் விக்ரம் ஜெகதீஷ் .

ondi 4
இந்தப் படத்தில் ஹீரோவாக அவர் சிறப்பாக நடித்துள்ளது படத்தின் முன்னோட்டத்திலும் பாடல்களிலும் தெரிகிறது . ஆளும்  கருப்பு நிறம் .
தமிழ் சினிமாவில் வில்லனாக இருந்து ஹீரோவாக ஆன கருப்பு நிற ஹீரோக்கள் எவ்வளவு உயரத்துக்கு போயிருக்கிறார்கள் என்பது நாம் அறியாதது அல்ல . அப்படி ஒரு உயரத்துக்கு விக்ரம் ஜெகதீஷும் போவார் .
பரணி மீண்டும் அருமையான பாடல்கள் கொடுத்துள்ளார் . நன்றாக எடுத்தும் இருக்கிறார் . இது கண்டிப்பாக வெற்றிப் படம் ” என்றார்

படத்தை எழுதி இயக்கி இருக்கும் பரணி பேசும்போது “இசையமைப்பாளராக என் பயணத்தைத் துவங்கி 18 வருடங்கள் ஆகி விட்டது.

ondi 9

இதுவரை எனக்குக் கிடைத்த அனுபவங்களையும் கற்றுத் தேர்ந்த விசயங்களையும் இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கேன்

பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு போகும் மணமகள் மாதிரி , நான் இசைத் துறையில் இருந்து இயக்குனர் துறைக்கு அடியெடுத்து வைக்கிறேன்.  இரண்டு வீட்டுப் பெருமையையும் நான் காப்பாற்றியாக வேண்டும் .

அதனால்தான் என் பிறந்த வீட்டு சொந்தங்களான இசையமைப்பாளர்கள் பாடல்களை வெளியிட , புகுந்த வீட்டு சொந்தங்களான இயக்குனர்கள் பெற்றுக் கொள்ளும்படி விழா நிகழ்ச்சியை அமைத்தேன்

இந்தப் படத்தில் கிராமத்து நாகரீகத்தை பதிவு செய்திருக்கிறேன் . படத்தின் கதாபாத்திரங்கள் பேசப்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மண்சார்ந்த வாழ்க்கையையும் மக்களையும் இதில் பிரதிபலித்து இருக்கிறோம்.

ondi 99

நாம் பிறந்தபோது ஒன்டிக்கட்டையாகப் பிறந்தோம் . போகும்போதும் ஒண்டிக் கட்டையாகத்தான் போகிறோம் என்பதை சொல்லும் படம் இது .

படத்தில் நடித்துள்ள விக்ரம் ஜெகதீஷ், தயாரிப்பாளர் தர்ம ராஜ், நேகா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் தர்மராஜுக்கு நல்ல பெயர் கிடைக்கும் .

என் கற்பனையை சிறப்பாக வடிவமைக்க தயாரிப்பாளர்களான தர்மராஜ் , கே கே சுரேந்தர் , என் மனைவியும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சுமித்ரா பரணி ஆகியோர் பக்கபலமாக இருந்தார்கள்.

குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பிடிக்கும் படமாக ஒண்டிக்கட்ட இருக்கும் ” என்றார் .

வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *