வேலவர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கே.எஸ்.சரவணகுமார் தயாரிக்கும் படம் “ஊர காணோம்”.
செவிலி, மோகனா போன்றபடங்களை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இந்தப் படத்தை கதை திரைக்கதை, வசனம் ஒளிப்பதிவு இயக்கி வருகிறார். இணைத்தயாரிப்பு – சகுந்தலா
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை வைத்து,
அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
நவம்பர் மாத பனிப்பொழிவில் இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் மலைக் கிராமத்தில் படமாக்கப்பட்டது.
பாடல்களை –பிரியாகிருஷ்ணன், பரிமளாதேவி என்ற இரண்டு பெண்கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.
இதில் பிர்லா, ஷா, பவித்ரா, நெல்லைசிவா, தவசி, தங்கதுரை, மும்பைசீனுஜி, சசி, மகேஷ் ஏட்டா,
‘பிச்சைக்காரன்’ ஜான்”, குணாஜி, வெங்கல்ராவ், கீதா, ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.