
வேலம்மாள் கிரியேஷன்ஸ் சார்பில் பத்திரிகைத் தொடர்பாளர் மதுரை செல்வம் தயாரிக்க, புதுமுகம் சஞ்சீவியுடன் கஞ்சா கருப்பு , வையாபுரி ஆகியோர் நடிக்க,
சினேகன் பாட்டு எழுத ராஜதுரை இயக்கி இருக்கும் சீனி என்ற படத்தின் கதாநாயகி………. ஓவியா! ஓவியா !! ஓவியா !
மேற் சொன்னவர்கள் தவிர அறிமுகக் காமெடியனாக பரத் , மற்றும் ராதாரவி, செந்தில், சரவணன் , மனோஜ்கிருஷ்ணா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம்,
ஒரு படித்த இளைஞன் உழைப்பை நம்பாது அதிர்ஷ்டத்தை நம்பியதால் வரும் ஏமாற்றங்களை சொல்கிறது .
படத்தில் எம் ஜி ஆரால் ரேஷன் கார்டு வழங்கப்பட்ட சீதா யானை முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்ற அதன் தோழியாக நடித்துள்ளார் ஓவியா . (யானை சென்ற வருடம் இறந்து விட்டது )
படத்தின் ரிலீசுக்காக மதுரை செல்வம் போராடிக் கொண்டு இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு கிடைத்த புகழ் இந்தப் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது .
சீனி என்ற பெயரை ‘ஓவியாவை விட்டா யாரு?’ என்று மாத்தி பிக் பாஸ் புகழ் ஓவியாவுக்கு ‘பிக் மாஸ்’ என்று அடைமொழி கொடுத்து படத்தை ரிலீசுக்குக் கொண்டு வரத் தயாராகிறார்கள் .
இந்தப் படத்துக்கு பதினோரு பிஆர் ஓக்கள் பணி புரிகிறார்கள்
இந்த நிலையில் நடந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், சண்டை இயக்குனர் ஜாகுவார் தங்கம் , இயக்குனர் சக்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்
மதுரை செல்வம் , தான் இந்தப் படத்துக்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லி ”அப்போது எனக்கு பெரிய உதவியாக இருந்தவர் கதிரேசன் சார் . பல பிரச்னைகளை அவர் தீர்த்து வைத்தார் .
அதே போல சூழலுக்கு ஏற்ற மாதிரி படத்துக்கு ஓவியாவை விட்டா யாரு என்ற பெயரையும் ஓவியாவுக்கு பிக் மாஸ் என்ற பட்டத்தையும் இயக்குனர் சக்தி சிதம்பரம் செய்தார் ” என்றார்
“தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எல்லா உதவிகளும் செய்யப்படும் ” என்று கதிரேசன் சொல்ல , ”கில்டு சார்பில் எல்லா உதவிகளும் செய்யப்படும்” என்றார் ஜாகுவார் தங்கம் .
” நான் பெயர் வைத்துக் கொடுத்தது எல்லாம் பெரிய விஷயம் இல்லை . பொருத்தமாக இருந்ததால் வைத்துக் கொடுத்தேன் .
மதுரை செல்வம் எப்போதோ செய்த புண்ணியம்தான் இந்தப் படத்தில் ஓவியா நடித்திருந்தது ” என்றார் சக்தி சிதம்பரம்
“கிளாமர் கிருஷ்ண மூர்த்தி, பி டி செல்வகுமார் , நான் , ஆர் எஸ் அந்தணன் , ரியாஸ் உட்பட இதுவரை எட்டு பி ஆர் ஓக்கள் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறோம் .
அந்த வரிசையில் மதுரை செல்வமும் இணைகிறார் . அவர் வெற்றி பெற வேண்டும் ” என்றார் விஜயமுரளி .
பெரு. துளசி . பழனிவேல் பேசும்போது ” படம் காமெடி, செண்டிமெண்ட் , ஆக்ஷன் எல்லாம் கலந்து நன்றாக வந்திருக்கிறது.
இந்தக் காலகட்டத்துக்கு தேவையான ஒரு மெசேஜ் இருக்கிறது . படம் வெளிவந்து நன்றாக ஓடும் ” என்றார்.