எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் சார்பில் செல்வம் மற்றும் முத்துக்குமார் தயாரிக்க, யாஷிகா ஆனந்த், பிரஜின் , ஜார்ஜ் மரியான், முத்துக்குமார் , பாலாஜி, லொள்ளுசபா மனோகர், தர்ஷினி நடிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கி இருக்கும் படம்.
காதலனை நம்பி ஒரு பெண் ( தர்ஷினி) செக்ஸ் வைத்துக் கொள்ள, அது இன்னொருவன் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் வீடியோவாக அவளுக்கே வருகிறது . அவன் பணம் கேட்பதோடு பலரிடம் படுக்கச் சொல்ல, அவர்களை சந்திக்கும் அந்தப் பெண் காதலனாக நடித்து ஏமாற்றியவனிடம் நியாயம் கேட்க, அவளை அடித்துக் கொல்கின்றனர்.
நடிகை ஸ்ரீஜா ( யாஷிகா ஆனந்த்) ஒரு படப்பிடிப்புக்காக ஏற்காடு வந்திருக்க , அவளை பேட்டி காண வரும் லோக்கல் டிவி ரிப்போர்ட்டர் ( முத்துக்குமார்) அவளோடு உறவு கொண்டு அதை வீடியோவாக எடுக்க முயல, அந்த முயற்சியில் ஹோட்டல் பேரரை அவன் கொல்லும்போதுதான் அவனது கொடூரம் புரிகிறது .
அவனிடம் இணங்குவது போல நடிக்கும் நடிகை ஸ்ரீஜா ஒரு நிலையில் அவனையே அடித்து வீழ்த்துகிறாள் .
“நீ என்ன குறி வச்சு வரலடா.. நான்தான் உன்னை குறிவச்சு வர வச்சேன் ” என்கிறாள் . ஏன் எதற்கு எப்படி அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் .
பெண்களை நம்ப வைத்து உறவு கொள்ளும் போது ஆபாசப்படம் எடுத்து அதை வைத்து மிரட்டி அவளிடம் பணமும் பிடுங்குவதோடு பலரிடமும் காமத்துக்கு அனுப்பி அதை வைத்து பல வகையிலும் பணம் அதிகாரம் என்று வாழும் கும்பல் பற்றிய படம் .
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களின் இன்ஸ்பிரேஷனில் எழுதி இருக்கிறார்கள்.
யாஷிகா ஆனந்த் பாலியல் குற்றங்களுக்கு எதிரான கேரக்டரிலேயே , சென்சார் ரப்பர் வைத்து அழிக்கும் அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறார் .
டாலியின் ஒளிப்பதிவில் இயற்கை அழகு வெளிப்படும் காட்சிகள் அருமை
ஏன் எதற்கு என தெரியாமலே பிரஜன் வந்து போகிறார் .
பக்குவமற்ற நடிப்பு , போதாத திரைக்கதை, நேர்த்தியற்ற மேக்கிங் , நோக்கத்துக்கு எதிரான காட்சி அமைப்புகள் என்று போகும் படம் சொல்ல வந்த விஷயத்துக்கு பாராட்டுப் பெறுகிறது.