
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கன்னட நடிக நடிகையர் நடிக்க இன்று வெளியாகி இருக்கும் படம் வில்லாதி வில்லன் வீரப்பன் .
இந்தப் படததில் வீரப்பனை பிடித்த கதையை சொல்கிறேன் என்ற பெயரில் வீரப்பன் மீது பல பொய்யான பழிகளை சுமத்தி இருக்கும் ராம் கோபால் வர்மா ,
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபகரனை மேலும் அசிங்கப்படுத்தி இருக்கிறார்
அதே நேரம் இன்னொரு பக்கம் , வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படை, தமிழக அரசு ஆகியவற்றையும் அசிங்கப் படுத்தி இருக்கிறார்
வீரப்பனைப் பிடிப்பதற்காக அவனால் கொல்லப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவியை ஆபரேஷனில் சேர்க்கிறதாம் அதிரடிப்படை .
அந்த பெண் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு உதவுவது போல நடித்து வீரப்பனை பற்றி தகவல் அறிந்து அவனைப் பிடிக்க உதவுகிறாளாம்.
வீரப்பனை பிடித்த அதிரடிப்படையில் இருந்த முக்கிய அதிகாரிக்கும் (அதாவது ஐ பி எஸ் விஜயகுமார் கேரக்டர் அல்லது அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த அதிகாரி கேரக்டர் ),
அவரது சக போலீஸ் அதிகாரியான குமார் என்பவருக்கும் ரொம்ப நாளாக ஈகோ சண்டையாம்.
அதனால் வீரப்பனை பிடிக்க குமாரைப் பயன்படுத்திக் கொண்டஅந்த முக்கிய அதிகாரி வேலை முடிந்ததும் குமாரை பெட்ரோல் .ஊற்றி எரித்துக் கொன்றாராம்
இதுதான் இந்த வில்லாதி வில்லன் வீரப்பன் படம் .
வீரப்பன் ராஜ்குமாரை மட்டும் கடததவில்லை ரஜினிகாந்தை கடத்த முயன்றான் . காஞ்சி சங்கராச்சாரியாரைக் கடத்த முயன்றான் என்று அள்ளி விடுகிறார்கள்
” என் கைக்கு ஏ கே 47 வரட்டும் . எல்லோரையும் உண்டு இல்லன்னு பண்றேன் . கவர்மென்டையே கவுக்குறேன்” என்று வீரப்பன் சொல்வதாகவும் வசனம் வருகிறது .
வீரப்பன் கொல்லப்பட்ட ஆபரேஷனுக்கு தலைமை வகித்த அதிரடிப்படை அதிகாரி, ஈகோ காரணமாக சக போலீஸ் அதிகாரியையே எரித்துக் கொன்று விட்டு,
வீரப்பனை விட தான் பெரிய ராட்சஷன் என்று கொக்கரிப்பதாக சொல்லும் காட்சியை நீக்காமல் அப்படியே அனுமதித்து ,
அதன் மூலம் போலீஸ் மந்திரியான முதல்வரை அவமானப்படுத்தி இருக்கிறது சென்சார் போர்டு
அது மட்டுமல்ல , வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மனைவி ஒரு காட்சியில் , காம வெறி ஏறிய பசு போன்ற முகபாவத்தோடு,
அதிரடிப்படை முக்கிய அதிகாரியை தடவிக் கொடுத்து ஆறுதல் கூறுகிறார் . அடத் தூ !
வீரப்பன் தரப்பை அசிங்கப்படுத்தினால் காவல் துறை ரசிக்கும் .அதிரடிப்படையினரை அசிங்கப்படுத்தினால் வீரப்பன் ஆதரவு தரப்பு ரசிக்கும் .
இதை சரியாக புரிந்து கொண்டு, நரித்தன வஞ்சகமாக… குயுக்தியோடு…
இராவணன் , பிரபாகரன் , வீரப்பன், அதிரடிப்படை அதிகாரிகள் , பெண்கள் , தமிழ் பத்திரிக்கையாளர்கள் தமிழக அரசு என்று ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தி இருக்கிறார் ராம் கோபால் வர்மா .
இதை அப்படியே அனுமதித்து இருக்கிறது சென்சார் போர்டு .
தட்டிக்கேட்கத்தான் யாரும் இல்லை .
படம் பற்றிய முழு விமர்சனத்துக்கு , விமர்சனம் பகுதியில் பார்க்கவும்
www. nammatamilcinema.in/villathi-villain-veerappan-review/