இயக்குனர் அரவிந்த ராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய குணசேகரன் எழுதி இயக்கியுள்ள படம் பாண்டியோட கலாட்டா தாங்க முடியல
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் , அரவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர் .
படத்தின் மூன்று பாடல்களும் முன்னோட்ட,மும் திரையிடப்பட்டது .
ஒரு பாடலை கானாபாலா எழுதி பாடி நடித்து இருகிறார் , , இன்னொரு பாடலை மரண கானா விஜி , சசி என்பவரோடு சேர்ந்து எழுதியதோடு, , பாடி நடித்தும் இருந்தார் .
மரண கானா விஜியின் பாடலில் உயரம் குறைவான நடிகர்கள் பலர் பேய் மற்றும் குரங்குகள் உருவத்தில் உடை அணிந்து தோன்றி நடித்து இருந்தது வித்தியாசமாக இருந்தது .
மிகுந்த சிரமத்தோடு பணியாற்றி இருக்கும் அவர்களை மேடையில் அழைத்து பாராட்டியது , பாராட்டப்பட வேண்டிய விஷயம் . தவிர பாடல் வெளியீட்டிலும் இவர்களுக்கு தரப்பட்ட மரியாதையை போற்றுதலுக்குரியது
படத்தின் முன்னோட்டமானது நட்பு , காதல் , நடனம் , பேய்களின் வருகை என்று கலந்து கட்டி இருந்தது .
நிகழ்ச்சியில் பேசிய கானா பாலா ” இந்த 2016 வது வருடத்தில் நான் பாடிய பாடல்கள் இதுவரை திரையில் வந்து இருக்கின்றன.
ஆனால் நான் திரையில் தோன்றி நடித்து இந்த வருடம் வெளிவரும் முதல் பாடல் இதுதான் . ஆனால் எனது பாடலை விட விஜியின் பாடல் நன்றாக இருக்கிறது ” என்றார் .
மரண கானா விஜி பேசும்போது ” நான் நிறைய பாடல்கள் பாடி இருக்கிறேன் . சினிமாவில் சில பாடல்கள் வந்தும் உள்ளன . ஆனால் இந்தப் பாடலை இயக்குனர் சிறப்பாக எடுத்துள்ளார் . எல்லோருக்கும் நன்றி ” என்றார்
பாடலாசிரியர் சசி பேசும்போது ” நானும் மரணகானா விஜியும் இதுபோல பல பாடல்களை எழுதி இருக்கிறோம் .
இனி ஒவ்வொன்றாக வரும் ” என்றார் .
இயக்குனர் அரவிந்தராஜ் தனது பேச்சில்
” இயக்குனர் குணசேகரன் , படத்தின் தயாரிப்பாளரிடம் ஒவ்வொரு நாளும் எடுக்க வேண்டிய காட்சி அதற்கு ஆகும் செலவு என்று முன்பே தெளிவாக எழுதிக் கொடுத்து,
அதில் இருந்து ஒரு ரூபாய் கூட அதிகம் ஆகாமல் 24 நாட்களில் எடுத்து முடித்து இருக்கிறார் , எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது , என்னிடம் உதவியாளராக இருந்த ஒருவரிடம் இவ்வளவு சிக்கனமா என்று !
இந்தப் படம் வெற்றி பெறும் என்பதற்கு இதுவே உதாரணம் ” என்றார் .
நிறைவாக சிறப்புரை ஆற்றிய மக்கள் இயக்குனர் எஸ் பி ஜனநாதன்,
” இன்றைய நிலையில் நல்ல படங்கள் தேவைப் படுகின்றன .
ஒரு பெரிய இயக்குனர் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எனக்கு ஒரு திட்டம் வந்தது. மாதம் ஒரு படம் எடுக்க வேண்டும் . இரண்டு கோடி ரூபாய்தான் பட்ஜெட் .
இப்படி வருடம் பனிரெண்டு படம் வர வேண்டும்’ என்று சொன்னார்கள்.
இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால் இங்கே நல்ல படங்கள் தேவைப்படுகின்றன . அதே நேரம் தயாரிப்பாளர்கள் சுரண்டப் படுகிறார்கள் . அது மாற வேண்டிய ஒன்று .
அதை நோக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
இந்தப் படத்தில் கானா பாலா , மரண கானா விஜி ஆகியோர் பாடி இருப்பது சந்தோசம் . எனது முதல் படத்தில் நான் கானா பாடல்களைக் கொண்டு வந்தேன். அப்புறம் அதிகமாக தொடர் முடியவில்லை .
கானா பாடல் என்பது ஏதோ இழிவான வார்த்தைகளைக் கொண்ட பாடல்கள் என்று பலரும் தவறாக பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் அது உண்மை அல்ல.
கானா பாடல்களில் வரும் சில நல்ல வரிகளை பெரிய கவிஞர்கள் கூட எழுத முடியாது .
உதரணமாக நான் எனது ஈ படத்தில் காலகாலமாக வழக்கில் இருக்கிற ஒரு பழைய கானா பாடலை பயன்படுத்தினேன்.
அதில் “குறுக்கு ஆறு நெடுக்கு ரெண்டு சுத்தி வரும் வாழ்க்கை , நீ முன்னே நான் பின்னே எல்லோருக்கும் இருக்கு ” என்ற (ரீதியில் !) வரிகள் வரும் .
குறுக்கு ஆறு நெடுக்கு ரெண்டு என்பது பிணத்துக்கு கட்டப்படும் பாடையின் அளவு . பாடை கட்டுபவனுக்கு மட்டுமே அது தெரியும். இப்படி பல ஆழமான கருத்துகள் கானா பாடல்களில் உண்டு .
சரியான கானா பாடல்கள் படங்களில் வெளிவந்தால் அது உலக அளவில் சென்னைக்கான அடையாளமாக விளங்கும் ” என்று முத்தாய்ப்பாக பேசி முடித்தார் .
உண்மை .