பாண்டிராஜ் இயக்கத்தில் கமல் ?

kamandi

கதகளி படம் வெளியாகி ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களைச்  சந்தித்தார் இயக்குனர் பாண்டிராஜ் . 

பல விசயங்களை ஜஸ்ட் ஃபிரண்ட்லியாக பேசினார் . 
” கதகளி மாதிரியான படத்தில் பாடல்கள் பெரிதாக நிற்காது . பாண்டியநாடு படத்தில் வந்த  ஃபை ஃபை ஃபை கலாய்ச்ச்சி ஃபை பாடல் போல ஒரு பாடல் இதிலும் வைப்பதாக இருந்தது . ஆனால் இந்த பரபரப்பு வேகத்தில் பாடல் நிற்காது என்பதால் வரவில்லை . 
பசங்க . பசங்க 2 , கதகளி எல்லாமே கமர்ஷியல் படம்தான் . அடுத்த படம் எந்த மாதிரி படமாக இருந்தாலும் கமர்ஷியல் படமாகத்தான் இருக்கும் ” என்று சொன்னார்  
இது நம்ம ஆளு படம் பற்றிப் பேச்சு வந்த போது ” அதில நாலு பாட்டு இருக்கு . அதுவே போதும் . அப்படிப் பாத்தா படம் எப்பவோ ரெடியா இருக்கு . ஆனா தயாரிப்பாளர் தரப்பு ( டி .ஆர். மற்றும் சிம்பு ) அதை எடுக்கணும்னு சொல்றாங்க . அதனால்தான் ரிலீஸ் தள்ளிப் போகுது .. இதுக்கு மேல இத பத்தி பேச வேணாம்.  ஏன்னா இன்னிக்கு எனக்கு சந்திராஷ்டமம் ” என்றார் . 
இது நம்ம ஆளு புரமோஷனுக்கு சிம்பு நயன்தாரா சேர்ந்து வருவாங்களா? என்ற கேள்விக்கு “ஏன் வரமாட்டாங்க . சேர்ந்து நடிக்கவே வச்சிட்டேன் . புரமொஷனுக்கு வர வைக்க முடியாதா என்னால்?” என்று திருப்பி அடித்தார் . (அதானே ?) 
சிவகார்த்திகேயனுடன் அடுத்த படம் எப்போ என்று கேட்டபோது” மெரினா படத்துல நான் சிவ கார்த்திகேயனை அறிமுகப்படுத்தினேன். நாங்க சேர்ந்து பண்ணின கேடி பிள்ள கில்லாடி ரங்கா படம்தான் ரெண்டு பேருக்கும் கமர்ஷியலா நல்லா போனது . மறுபடியும் அவரை வச்சு பண்ணலாம்தான். ஆனா சம்பளம்னு அவர் கை விரல்கள் பத்தாம கால் விரல்களையும் சேர்த்து காட்டுவார் போல இருக்கே ?” என்றார் .
இது இப்படி இருக்க ,கமல்ஹாசனை வைத்து பாண்டிராஜ் ஒரு படத்தை  இயக்கப் போவதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →