உறவின் மரியாதை சொல்லும் ‘ பறந்து செல்ல வா ‘

paranthu-1

8 பாய்ண்ட் என்டர்டைன்மென்ட் சார்பில்  பி. .அருமைச் சந்திரன் தயாரிக்க ,  அக்ராஸ் பிலிம்ஸ் வழியே கலைப்புலி எஸ் தாணு உலகமெங்கும் வெளியிட 

நாசரின் மகனும் , ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் நடித்தவருமான லுத்புதீன் நாயகனாக நடிக்க , ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க 

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் இயக்குனர் தனபால் பத்மநாபன்,  சத்யராஜ் குமார் பேயோன் ஆகியோர் திரைக்கதை வசனம் எழுத, 

paranthu-2

மேற்படி தனபால் பத்மநாபன் இயக்கி இருக்கும் படம் பறந்து செல்ல வா.

ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர ஆனந்தி,  சுஜாதா என்று பல துணைக் கதாநாயகி நடிகைகள் , 

இவர்களோடு நரேல் கெங் என்ற ஒரு சீனப் பெண்ணும் முக்கியக் கதாநாயகியாக நடிக்கிறார் .  சதீஷ், கருணாகரன், ஆர் ஜே பாலாஜி , மனோபாலா ,

பேராசிரியர் ஞான சம்பந்தன், ஜோ மல்லூரி, சுகன்யா ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

paranthu-8

ஸ்கேன்னி பேங் என்பவர் உள்ளிட்ட சில அயல்நாட்டு வில்லன்களும் படத்தில் உண்டு .

இந்தப் படத்துக்காக ஒரே நேரத்தில்ம் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் எல் ஈ டி ஸ்கிரீன் மூலம் படத்தின்  டிரைலர் காட்டப்பட்டபடி ஊர்வலம் ஒன்று நடத்தி வித்தியாசமாக முறையில் பிரபலம் செய்தனர் . 

இந்த நிகழ்ச்சியில்  கலைப்புலி எஸ் தாணுவும் நடிகர் நாசரும் கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்ததோடு பயணமும் செய்தனர். 

paranthu-5படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினரோடு கலைப்புலி எஸ் தாணு , நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோரும் கலந்து கொண்டனர் . 

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் ” நாசர் சாரின் மகன் லுத்புதீன் , கதை  நாயகன் என்ற வார்த்தைக்கு மிகப் பொருத்தமாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் .

 படத்தில் இடம் பெற்ற பலரும் இங்கிருந்து சிங்கப்பூர் வந்து சுமார் ஐம்பது நாட்கள் தங்கி நடித்துக் கொடுத்தனர் . அவர்களுக்கு நன்றி .

paranthu-6

தவிர படத்தில் மலேசிய சிங்கப்பூர் கலைஞர்களும் உண்டு . சீனப் பெண் நரேல் கெங் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். 

என்னோடு தயாரிப்பில் இணைந்த அப்துல்லா , மற்றும் வியாபாரத்தில் இணைந்த அக்ராஸ் பிலிம்ஸ் நிறுவனங்களுக்கு நன்றி 

இந்தப் படத்தை தாணு சார் வெளியிடுவது பெருமையான விஷயம் . அவருக்கு மனமார்ந்த நன்றி ” என்றார் .

இளம் நடிகை சுஜாதா பேசும்போது ”

paranthu-3

நான் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் . சில வருடங்களாக சென்னையில் தங்கி நடித்துக் கொண்டு இருக்கிறேன் .

இந்தப் படத்துக்காக நான் மீண்டும்  என் சொந்த ஊருக்குப் போய் நடித்தது  சந்தோஷமான  விஷயம் ” என்றார் . 

அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பேசிய ஸ்ரீராம் , “ஒரு தரமான படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம் . லுத்புதீன் , ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், நரேல் என்று எல்லோரும் அற்புதமாக நடித்துள்ளனர் .

படம்  ஒன்பதாம் தேதி வெளிவருகிறது ” என்றார் . 

நடிகர் சதீஷ்  தனது பேச்சில் ” நாசரின் வாரிசுக்கு நடிக்க வரா தா என்று சாதரணமாக கேட்கலாம் . இனிஷியல்தான் வரும் .

paranthu-99

நடிப்பு எல்லாம் சொந்தத் திறமை இருந்தால்தான் வரும் . லுத்புதீன் மிக திறமையான நடிகர் . சிறப்பாக நடித்துள்ளார் ” என்றார் .

நடிகர் நாசர் பேசும்போது ” முதல் விஷயம் …. , இளம் கலைஞர்கள் வெல்ல வேண்டும் . அவர்கள் நடித்த படம் நன்றாக ஓட வேண்டும் .அது எனது எப்போதுமான ஆசை . அந்த விதத்தில் இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும் . 

அடுத்து லுத்புதீன் என் மகன் என்பதால் , அவன் நல்ல நடிகனாக  வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவன்  என் பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதால் அல்ல ;

paranthu-4

அவன் மூலமும் என் பெயரை நானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் . அதனால் அவனை  பல தரப்பட்ட நடிப்புப் பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கிறேன் . இன்னும் கற்றுக் கொண்டு இருக்கிறான். . 

இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு வெளியிடுவதன் மூலம் படத்துக்கு வெளிச்சம் கிடைத்துள்ளது . அவருக்கு என் நன்றி ” என்றார் . 

இயக்குனர் தனபால் பத்மநாபன் தன் பேச்சில் ” காதலைத் தேடும் ஒரு இளைஞன் எது உண்மையான காதல் என்று உணர்வதே இந்தப் படம் . 

paranthu-9

காதலன்– காதலி , கணவன் – மனைவி உட்பட என்று எந்த  உறவாக இருந்தாலும் இரு தரப்புமே  ஒருவருக்கு ஒருவர் மதித்து உணர்வுகளை புரிந்து முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்வதே

அந்த உறவு நீடிக்க நல்ல வழி . . துரதிர்ஷ்ட வசமாக தமிழ் சினிமாவில் இதுவரை அது சரியாக சொல்லப் படவில்லை என்று கருதுகிறேன் . இந்தப் படம் அதை சொல்லும் . 

படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர் . எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இது  வந்துள்ளது ” என்றார். 

எல்லோரையும் வாழ்த்தினார் கலைப்புலி எஸ் தாணு. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *