பூனை ஒன்று டைனோசராகும் ‘மியாவ்’

meow-movie-press-meet-photos-7

குளோபல் உட்ஸ் மூவீஸ் சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ்  தயாரிக்க,  செல்ஃபி  கேட் என்ற பெர்சியன் பூனை ஒன்று கதாநாயகனாக நடிக்க ( எஸ்ங்க.. ஆண்  பூனைதான்)

ராஜா ,  சன் மியூசிக் புகழ் சஞ்சய்  நிக்கி, ஹைடன் , குமார் ஆகியோர் வில்லன்களாக நடிக்க ,  ஊர்மிளா காயத்ரி கதா நாயகியாகவும், ஷைய்னி இரண்டாம் கதாநாயகியாகவும்  நடிக்க,
(நோ…ஓ..ஓ..ஓ… அப்படி இல்ல … அப்படி இல்ல …)
meow-movie-press-meet-photos-22
டேனியல் , சாய் கோபி,  டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா  , ஸ்டான்லி, மைனா பாலு , ஆகியோரும் யுவினா என்ற குழந்தை நட்சத்திரமும் நடிக்க 
சின்னாஸ் பழனிச்சாமி எழுதி இயக்கி இருக்கும் படம் மியாவ் 
இந்த அறிமுகமே சொல்லி விடும் , இது வித்தியாசமான படம் என்று . (எப்படி என்பதை இயக்குனர் சொல்லும்போது கேட்போம் )
வின்சென்ட் அடைக்கல ராஜ் திருச்சியின் புகழ் பெற்ற காங்கிரஸ் பிரமுகர் மற்றும் ரஜினியின் நெருங்கிய நண்பரான ,  அடைக்கல ராஜின் வாரிசு .
meow-movie-press-meet-photos-3
வின்சென்டின் அண்ணன் ஃபிரான்சிஸ்  அனுபவம் மிக்க விநியோகஸ்தர் . திரையரங்கு உரிமையாளர்களாகவும்  இருக்கும் குடும்பம் அது . 
மியாவ் படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான்கு பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டனர் . 
இரண்டு பாடல்கள் அழகான கிளாமர் பாடல்களாகவும் இரண்டு  பாடல்கள் குழந்தைகளைக் கவரும் பாடல்களாகவும் இருந்தன . (என்ன பண்ணப் போறோமோ தெரியல )
அதில் ஒரு பாடல் பூனை பாடுவது போன்ற குரலில் இருந்தது . 
meow-movie-press-meet-photos-5
முன்னோட்டத்தில் ஒரு பூனை பலரையும் காமெடியாக மற்றும் சீரியசாக படாதபாடுபடுத்துகிறது . பூனை,  ஒரு குட்டி டைனோசர் போல மாறும் ஒரு ஷாட் மிரட்டியது . 
நிஜப் பூனையுடன் கிராஃபிக்ஸ் சேர்த்து  பல காட்சிகளில் அட்டகாசமான எக்ஸ்பிரஷன்களைக் கொண்டு வந்து இருந்தனர்.  சூப்பரான கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன்  வேலை . சபாஷ் !
நிகழ்க்சியில் பேசிய இளம் நடிக நடிகையர் பலரும்  வின்சென்ட் அடைக்கல ராஜ் , தங்கள் எல்லோரையும் உரிய முக்கியத்துவம் கொடுத்து அன்புடன் நடத்தியதையும் ,
இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி மிக  சிறப்பாக  வேலை வாங்கியதையும்  .நெகிழ்வோடும் மகிழ்வோடும் பகிர்ந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில் பேசிய கலைப்புலி எஸ் தாணு ” ஒரு திரைப்படத்தில் முதல்  முறையாக ஒரு பூனை முன்னணி கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறது என்பதை கேட்டவுடன்,
meow-movie-press-meet-photos-23
எனக்கு மியாவ் படத்தின் டிரைலரை பார்க்க வேண்டும் என்று  தோன்றியது.
அடைக்கல ராஜ் அவர்களின் குடும்பம் சினிமா துறையில் பல காலம் முழுமையாக ஈடுபட்ட குடும்பம் .  எனக்கு மிகவும் நெருக்கமான குடும்பம் அது .
இன்று அந்தக் குடும்பத்தில் இருந்து  வின்சென்ட் அடைக்கல ராஜ் படம் எடுக்க வந்திருக்கிறார்
தயாரிப்பு துறையில் அடியெடுத்து  வைக்கும் வின்சென்ட் அடைக்கலராஜிற்கு இந்த மியாவ் படம் ஒரு சிறந்த அடிக்கல்.  நிலையான தயாரிப்பாளராக
தமிழ்த் திரையுலகில் கால் பதிக்கத் தேவையான எல்லா சிறப்பம்சங்களும் அவருக்கு இருக்கின்றது. அதற்கு இந்த மியாவ் திரைப்படம் ஒரு சிறந்த ஆரம்பம்..
இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். அவர் தொடர்ந்து படம் எடுக்க  வேண்டும்” என்று வாழ்த்தினார் .
இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி பேசும்போது ” நான் விளம்பரப் படங்கள் எடுப்பவன் . அந்த வகையில் வின்சென்ட் சார் கோவையில் வைத்து இருக்கும் பிளாக் தண்டர்  தீம் பார்க்குக்கு,
 விளம்பரப் படம் எடுத்துக் கொடுத்தேன் . அது அவருக்கு பிடித்து இருந்தது .
meow-movie-press-meet-photos-18
சினிமா என்று யோசித்தபோது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று யோசித்து பூனையை அடிப்படையாக வைத்து கதை தயார் செய்தேன் . அவருக்கும் பிடித்தது.
தனக்குக் கீழ் வேலை செய்பவர்களையே நடிகராக்கி விடும் பெருந்தன்மை அவருக்கு இருந்தது .
இது ஒரு பேண்டசி காமெடி த்ரில்லர் படம் . 
கதை என்ன என்றால் , நண்பர்கள் சிலர் ஒரு பயணத்தில் ஒரு பெண்ணை ஏமாற்றி சீரழித்துக்  கொன்று விடுகின்றனர் . அவளது ஆவி ஒரு பூனையின் உடலுக்குள் புகுந்து குற்றவாளிகளைப் பழி வாங்குகிறது . 
meow-movie-press-meet-photos-19
ஆனால் இந்தப் படத்தில் நீங்கள் பேயைப் பார்க்க முடியாது. வழக்கமான பேய்ப் படங்களில் வரும் காட்சிகள் எதுவும் இருக்காது .  எல்லோருக்கும் பிடித்த வித்தியாசமான படமாக இது இருக்கும் 
இந்தியாவிலேயே இது வரை இப்படி ஒரு வித்தியாமான படம் வந்தது இல்லை ” என்றார் . 
சிறப்புரை ஆற்றிய வின்சென்ட் அடைக்கல ராஜ்
” எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்ற தாணு சார் இந்த நிகழ்சிக்கு வந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது . அவருக்கு நன்றி . 
எனக்கு சினிமாவில் பெரிதாக ஆசை இல்லை . ஆனால் எனக்கு தெரிந்த இளைஞர்கள் சிலருக்கு சினிமாவில் ஆசை இருந்தது . அவர்கள் நல்லவர்களாக திறமைசாலிகளாக  தீவிர சினிமா கனவில் இருந்தார்கள் .
வின்சென்ட் அடைக்கல ராஜ்
வின்சென்ட் அடைக்கல ராஜ்

அவர்களுக்கு உதவி அவர்களை சினிமா துறையில்  கை கொடுக்கவே இந்த படத்தை எடுத்தேன் . இயக்குனர சொன்ன கதையும் சிறப்பாக இருந்ததால் நம்பிக்கையுடன் எடுத்து  முடித்தேன். 

நான் பல தொழில்களைச் செய்கிறேன் .  அவை எல்லாம் முறைப்படுத்தப்பட்ட தொழில்கள். . ஆனால் சினிமா அப்படி இல்லை.  இங்கே எது எதற்கோ யார்  யாரையோ எதிர்பார்க்க வேண்டி உள்ளது .
இந்த சினிமாவையும் முறைப்படுத்தப்பட்ட தொழிலாக மாற்றினால் என்னைப் போல இன்னும் பலர் வருவார்கள் . தாணு போன்றவர்கள் அதை செய்ய வேண்டும் ” என்றார் . 
நியாயம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *