ஐந்து ஜோடிகளின் வாழ்வை சொல்லும் ‘பட்டதாரி’

patta 3

Ges மூவீஸ் சார்பில் இளங்கோவன் லதா தயாரிக்க, அபி சரவணன் , அதிதி , மகாநதி ஷங்கர் நடிக்க , 

எஸ் எஸ் குமரன் இசையில்  ஆர் சங்கரபாண்டி இயக்கி இருக்கும் படம் பட்டதாரி .
 படத்தின் பாடல்களை, எஸ் எஸ் குமரனை இசையமைப்பாளராக  அறிமுகப்படுத்திய இயக்குனர்  சசி  வெளியிட ,  சங்கரபாண்டியின் குருநாதரான இயக்குனர் களஞ்சியம்,
 மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள் . 
patta 1
திரையிட்ட முன்னோட்டத்தில் பட்டதாரி இளைஞர்கள் ஐவரின் வாழ்க்கை, , சண்டை,  சச்சரவு   சொல்லப்பட்டது . பாடல்கள் இரண்டை காட்சிகள் இல்லாமல்,
 பாடல் வரிகளை படத்தின் புகைப்படங்களுடன் திரையிட்டனர் .  பெண் குரல் மட்டும் பாடும் பாடல்  ஒன்றில் பாடகி சிறப்பாக பாடி இருந்தார் 
patta 2
பொதுவாக  பெண்கள் பெயரில் தயாரிக்கப்படும் படங்கள்  அந்தப் பெண்களின் கணவர் , சகோதரர் அல்லது அப்பா ஆகியோராலேயே எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட பெண் படபிடிப்பை எட்டிக் கூடப் பார்த்து இருக்க மாட்டார் . 
ஆனால் இந்தப் படததின் தயாரிப்பாளர் தம்பதியான இளங்கோவன் . லதா இருவரும் மேடையில் இருக்க , 
வரவேற்புரை ஆற்றிய லதா ” எங்களுக்கு இது முதல் படம். எல்லோரும் சிறந்த ஒத்துழைப்புக் கொடுத்தனர் .
patta 4
நாங்கள்  தொடர்ந்து  நல்ல படங்கள் தரவேண்டும் என்று விரும்புகிறோம் .
எங்களுக்கு அனைவரின் தொடர் ஒத்துழைப்பும் வேண்டும் ” என்று , 
அழகாகவும் ஆக்கபூர்வமாகப் பேச, இளங்கோவன் மேடையில் அமர்ந்து அதை ரசித்தது…. அழகு!  . 
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கம்  சார்பில் கலந்து கொண்டு பேசிய அம்மா கிரியேஷன்ஸ் சிவா
patta 7
” சிறு படத் தயாரிப்பாளர்கள் மற்றும் சிறு  படங்களில் பணியாற்றும் இயக்குனர் உள்ளிட்ட படைப்பாளிகள்,
 தங்கள்  படங்களை சிறப்பான முறையில் மக்களிடம் அறிமுகப்படுத்தக்  கற்றுக் கொள்ள வேண்டும். ” என்றார் . 
இயக்குனர் களஞ்சியம் பேசும்போது ” பல மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் எனது உதவி இயக்குனர் ஒருவரை இழந்தேன் .
patta 8
நானும் இந்தப் படத்தின் இயக்குனர்  சங்கர பாண்டியும்
படுகாயத்தோடு  உயிர் பிழைத்தோம் . அந்தத் தம்பி இந்தப் படத்தை இயக்கி இருப்பது மகிழ்ச்சி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்  ” என்றார் 
தனஞ்செயன் தன் பேச்சில் ” எஸ் எஸ் குமரன் இடையில் படம் இயக்க்ம்,  தயாரிப்பு என்று எல்லாம் போய் நஷ்டப்பட்டார் .
patta 6
‘நீங்கள் சிறந்த இசையமைப்பாளர் .  இசையில் கவனம் செலுத்துங்கள்’ என்று  சொன்னேன் .
அதன்படி அவர் மீண்டும் இசையில்  கவனம் செலுத்துகிறார் . வாழ்த்துகள் ” என்றார் . 
சிறப்புரை தந்த இயக்குனர் சசி ”  படத்தின் போஸ்டர் டிசைன் நன்றாக இருந்தது .ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு பட்டதாரி பயலுக என்று பெயர் வைத்து இருந்தார்கள் .
patta 5
அதை போஸ்டரில் பார்த்து இருக்கிறேன் . இப்போது பட்டதாரி என்று சுருக்கி உள்ளனர் .
பாடல்கள் நன்றாக வந்துள்ளன . நான் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்திய  எஸ்எ. ஸ் குமரனின் மறு எழுச்சிக்கு எனது வாழ்த்துகள். 
பிச்சைக்காரன்  படத்தின் நான் அறிமுகம் செய்த கலை இயக்குனர் ஆனந்த் மணி இந்தப் படத்திற்கும் கலை இயக்குனராக இருக்கிறார் . அவருக்கும் வாழ்த்துகள் .  படம் வெற்றி பெறவும் வாழ்த்துகள் ” என்றார் . 
இயக்குனர் சங்கரபாண்டி பேசும்போது
patta 9
” பொதுவாக படததில் ஐந்து நண்பர்கள் இருந்தால் ஒரு நபரை ஒரு பெண் காதலிப்பார் . மற்ற நண்பர்கள் அந்தக் காதலுக்கு உதவுவார்கள் . 
ஆனால் நான் புதுமையாக ஐந்து பையன்களுக்கும ஜோடி கொடுத்து உள்ளேன் . அந்த பத்து பேரின் கதையே இந்தப் படம் ” என்றார் . 
விழாவில் ஹீரோ ஹீரோயின் யாரும் கலந்து கொள்ளவில்லை . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →