லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ராஜ் கிரண், அதர்வா, ராதிகா, ஜெயப்பிரகாஷ், நடிப்பில் சற்குணம் இயக்கி நவம்பர் 25 அன்று திரைக்கு வரும் படம் பட்டத்து அரசன் .
தஞ்சாவூர்ப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தாத்தா, அப்பா, , மாமா , மகன் என்று ஒரு குடுபத்தினரே ஒரு கபடி அணியில் சம்பவத்தால் கவரப்பட்டு அதற்கு ஒரு கதை செய்து இந்தப் படத்தை உருவாக்கினேன் என்கிறார் சற்குணம்.
தாத்தாவாக ராஜ்கிரண். பேரனாக அதர்வா. எலியும் பூனையுமாக இருவரும்.
தார பாகம் என்று ஒரு வழக்கம் உண்டு. அதாவது ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து முதல் மனைவிக்கு பத்து பிள்ளைகள் இருந்து இரண்டாம் மனைவிக்கு ஒரே ஒரு பிள்ளை இருந்தாலும் கணவரின் சொத்து முதல் மனைவிக்குப் பாதியும் இரண்டாம் மனைவிக்குப் பாதியும் சமமாகத்தான் போகும்.
பிள்ளைகள் அதிகம் இருப்பதால் முதல் மனைவிக்கு அதிக சொத்து எல்லாம் போகாது. இந்தத் தார பாகத்தால் வரும் பிரச்னைகளும் ஒரு ஊரை எதிர்த்து ஒரு குடும்பமே கபடி ஆடுவதும்தான் கதையாம்.
ஒரே பிள்ளை வைத்துக் கொண்டு சொத்தில் பாதி வாங்கும் அம்மாவாக ராதிகா.
வெற்றிலைத் தோட்டம், வெற்றிலைக் கொட்டி, அதை வளர்த்து அறுவடை செய்யும் முறை இவற்றை இந்தப் படத்தில் முக்கிய விசயமாகப் பார்க்கலாம் என்கிறார் சற்குணம் .