ஏ கே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அனல் அரசு தயாரிக்க, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா , வரலக்ஷ்மி, தேவதர்ஷினி , காக்கா முட்டை விக்னேஷ், அபி நக்ஷத்ரா, வர்ஷா நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி அனல் அரசு இயக்கி இருக்கும் படம்.
ஆளுங்கட்சியின் மோசமான எம் எல் ஏ வை (சம்பத்) ஒரு டீன் ஏஜ் பையன் ( சூர்யா) முப்பத்தி ரெண்டு துண்டுகளாக வெட்டிகே கொல்கிறான் ஜெயிலில் அடைக்கப்படும் அவனை உள்ளேயே தீர்த்துக் கட்ட செய்ய எம் எல் ஏ வின் மனைவி ( வரலக்ஷ்மி ) அந்த பொண்டாட்டியின் தகப்பனான அரசியல்வாதி (அஜய் கோஷ்)ஆகியோர் திட்டமிட , அவனது அம்மா (தேவதர்ஷினி) தவிக்க
ஜெயிலில் அவன் அஞ்சாறு சாமுராய் வீரர்களுக்கு இணையாக இருக்கிறான் .
அரசியல்வாதி தரப்பு பெரும் முயற்சி எடுத்துக் கொலை செய்ய முயல் , அவன் பயப்படாமல் மீண்டும் ஜெயிலுக்கே வருகிறான் . எங்கயாவது தப்பிப் போய் பொழைச்சுக்கடா என்று போலீசே சொல்ல அவன் மறுக்கிறான் . அவன் சொல்லும் பிளாஷ்பேக்கில் அவன் அண்ணன் ( விக்னேஷ்) அண்ணனின் காதலி (அபி) காதலியின் அம்மா , தம்பி , செத்துப் போன எம் எல் ஏ எல்லோரும் வருகிறார்கள்.
நடந்தது என்ன ? முடிந்தது என்ன என்பதே படம்.
படத்தில் முதலில் கவர்வது வேலு ராஜின் அற்புதமாக கேமரா கோணங்கள் . படத்துக்கு பெரும் பலம்.
சூர்யா சண்டைக் காட்சிகளில் சிறப்பாக அடிக்கிறார் . நடிப்பில் உற்சாகமும் இருக்கிறது . இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தலாம்.
அடாவடி அரசியல் கதாபாத்திரத்தில் சம்பத் அசத்தி இருக்கிறார் .
சாம் சி எஸ் சின் பின்னணி இசை அருமை .
ஆனால் எல்லாவற்றையும் விட அசத்தல் அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள்தான் . ஸ்டன்ட் மாஸ்டரே இயக்குனர் என்னும்போது சும்மா விட்டு விடுவாரா ? பிரம்மாதம். குறிப்பாக அந்த ‘MMA’ பாக்சிங் சண்டை.. பாக்கற நமக்கே கதி கலங்குது .
படத்தின் ஒலி வடிவமைப்பும் அபாரம் .
தேவதர்ஷினி எல்லாம் பத்து ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கிறார் .
படம் முடிந்து விட்டது என்று பாதிப் பேர் வெளியே போன பிறகு பதினஞ்சு நிமிஷம் ஓடுது
சண்டைக் காட்சிகள், ஒளிப்பதிவு , பின்னணி இசை இவற்றை தவிர்த்து விட்டுப் பார்த்தால் வழக்கமான கதைதான் எனினும் சண்டைப் பிரியர்களை படம் ஒருவேளை திருப்திப் படுத்த வாய்ப்பு உண்டு என்று யூகிக்க ஒரு வாய்ப்பு இருக்கவே செய்கிறது .
