விக்ரம் பிரபு நடிக்கும் வீர சிவாஜி , நெருப்புடா போன்ற படங்கள் வேகமாக உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில்,
பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் பிரபு , விக்ரம் பிரபு , பிரபுவின் சகோதரர் ராம்குமார் மற்றும் நெருப்புடா படத்தின் இயக்குனர் அசோக்குமார் ஆகியோர்
நிகழ்ச்சியில் பேசிய பிரபு
” நடிகர் திலகம் என்னை பத்திரிகையாளர்களிடம் ஒப்படைத்தார் . நான் என் மகனை உங்களிடம் ஒப்படைத்தேன். எங்களுக்கு காலகாலமாக நீங்கள் காட்டும் அன்பு முக்கியமானது .
தம்பி விக்ரம் பிரபு நடிக்கும் சிவாஜி படம் கொஞ்சம் தாமதாமகிக் கொண்டு இருக்கிறது . விரைவில் வெளிவந்து விடும் .
நெருப்புடா படத்தின் தயாரிப்பில் விக்ரம் பிரபுவும் இருக்கிறார். அண்ணன் மகன் துஷ்யந்தும் நடிக்க வருகிறார் .
உங்கள் ஆதரவு என்றென்றும் எங்களுக்கு வேண்டும் .
இந்த நேரத்தில் ஒரு கோரிக்கை .
படங்களுக்கான விமர்சனங்களை எழுதும்போது குறைகளை குறைவாகவும் நிறைகளை அதிகமாகவும் சொல்லி படங்களை காப்பாற்றும் பொறுப்பு பத்திரிகையாளர்களான உங்களுக்கு இருக்கிறது ” என்றார் .
“எங்கள் குடும்பத்துக்கு பத்திரிக்கை உலகம் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி ” என்றார் ராம்குமார்
விக்ரம் பிரபு தனது பேச்சில்
” 1952 ஆம் ஆண்டு தாத்தா நடிக்க வந்தார். 1982 ஆம் ஆண்டு அப்பா நடிக்க வந்தார் . 2012 இல் நான் அறிமுகம் ஆனேன்.
இப்படி முப்பது வருடத்துக்கு ஒரு வாரிசு எங்கள் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ளது . எங்கள் அனைவருக்கும் நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி .
படங்களை விமர்சிக்கும்போது ரொம்ப கடினமாக இல்லாமல் விமர்சிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையும் ” என்றார்